திருச்சி – லால்குடி (கழக) மாவட்டம் புள்ளம்பாடியில் அறிவாசான் தந்தை பெரியாரின் 50ஆவது ஆண்டு நினைவு நாள் (24.12.2023) நிகழ்வு நடைபெற்றது.
காலை 10 மணிக்கு புள்ளம்பாடி கடைவீதியில் தோழர்களின் ஒலி முழக்கத்திற்கிடையில் கழகக் கொடியினை ஒன்றியத் தலைவர் மு.திருநாவுக்கரசு ஏற்றி வைத்தார். பிறகு அவரின் தலைமையில் தோழர்களின் ஒலி முழக்கத்துடன் 300 மீட்டர் தொலைவில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு ஊர்வலமாக சென்று மாலை அணிவித்தனர். இந்நிகழ் வில் விசிக, காங்கிரஸ், திமுக மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். காங்கிரஸ் வெ.ரெங்கராஜன், விசிக கி.க.பால முருகன், டி.அஜித், எம்.அஜித், அகிலன், தினேஷ், சுரேஷ், ரஞ்சித், மெல்வின், ஷாம், ரீகன், ஜான்மில்ட்டர், பெ.திராவின், பெ.பார்த்திபன், ஜான்சன்ராஜா, ஆகியோர் கலந்து கொண்டனர். கவிஞர் பொற்செழியன் ஒலி முழக்கமிட்டு நன்றி கூறினார்.
புள்ளம்பாடியில் தந்தை பெரியார் நினைவு நாள் கூட்டம்
Leave a Comment