அக்.16 முதல் 15 நாட்களுக்கு தமிழ்நாட்டுக்கு 3,000 கனஅடி நீர் திறக்கப்பட வேண்டும்

Viduthalai
2 Min Read

 கருநாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் ஆணை

புதுடில்லி,அக்.14- அக்டோபர் 16ஆம் தேதி முதல் 15 நாட்களுக்கு தமிழ்நாட்டுக்கு காவிரியில் வினா டிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க கரு நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

டில்லியில் நேற்று (13.10.2023) காவிரி நதிநீர் மேலாண்மை ஆணை யத்தின் 26ஆவது கூட்டம் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலை மையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவேரி தொழில் நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம், உறுப்பினர் எல்.பட்டாபி ராமன், உதவி செயற்பொறியாளர் ரம்யா மற்றும் கேரளா, கருநாடகா, புதுச்சேரி ஆகிய பிற மாநிலங் களில் இருந்து உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு சார்பாக பில்லிகுண்டுலிருந்து கர்நாடகா வினாடிக்கு 16,000 கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்தில் வலியுறுத்தப்பட் டது. இந்நிலையில், வரும் அக் டோபர் 16ஆம் தேதி முதல் 15 நாட்களுக்கு தமிழ்நாட்டுக்கு காவிரியில் வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தர விட்டுள்ளது.

முன்னதாக, அமைச்சர் துரை முருகன் கூறும்போது, “தமிழ்நாட் டுக்கு காவிரியில் 3 ஆயிரம் கனஅடி நீர் தரவேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூறியுள்ளது. இன்றைய காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், 16 ஆயிரம் கனஅடி நீர் தரவேண்டும் என்று வலியுறுத்துவோம். 8 நாட்களுக்கு தினசரி 3 ஆயிரம் கனஅடி நீர் தர வேண்டும் என்று ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்ட நிலையில், அவர்கள் 4,666 கன அடிநீர் வழங்கினர். இதன்மூலம் நேற்று வரை 4.21 டிஎம்சி நீர் வந்துள்ளது. இன்னும் நமக்கு 0.454 டிஎம்சி வரவேண்டும்.மேட்டூர் அணையை பொறுத்த வரை தற்போது 8 டிஎம்சி தண்ணீர்தான் உள்ளது. எனவே, குடிநீருக்கு மட்டுமே தண்ணீர் தரப்படும். காவிரி தொடர்பாக சட் டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், ஒன்றிய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசுக்கு பயந்து கருநாடகா தண்ணீர் தந்தாலும், அங்குள்ள மக் களுக்காக அவர்களும் நாடகமாட வேண்டியுள்ளது” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *