தஞ்சை, ஜன. 23- ‘விடுதலை’ அச்சக மேலாளர் க.சர வணனின் மாமனார் – சிவகாமி, பிரியா, பிர காஷ் ஆகியோரின் தந் தையார் திரு. பி.சண்முக சுந்தரம் (வயது 80, இந் தியன் வங்கி பணியாளர்-ஓய்வு) உடல்நலக்குறை வால் தஞ்சை இல்லத்தில் 21.1.2024 அன்று இரவு மறைவுற்றார்கள்.
தமிழர் தலைவர் ஆசிரியர் இரங்கல் செய்தியறிந்த திரா விடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரி யர் அவர்கள் மருமகன் க.சரவணன், மகள் பிரியா, மகன் பிரகாஷ் ஆகியோரிடம் தொலைப் பேசியில் தொடர்பு கொண்டு இரங்கலும், ஆறுதலும் தெரிவித்தார்.
கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பா ளர்கள் இரா.ஜெயக் குமார், இரா.குணசேக ரன், காப்பாளர் மு. அய் யனார், தஞ்சை மாவட்ட தலைவர் சி. அமர்சிங், மாவட்ட செயலாளர் அ. அருணகிரி, கிராம பிரச் சார குழு மாநில அமைப் பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், மாநகரத் தலைவர் பா. நரேந்திரன், மாநகரச் செயலாளர் அ. டேவிட், மாநில மாண வர் கழக செயலாளர் இரா. செந்தூரப்பாண்டி யன், பெரியார் அறக் கட்டளை உறுப்பினர் கு. அய்யாதுரை, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றி குமார், பகுத்தறிவாளர் கழக ஊடகப்பிரிவு மாநில தலைவர் மா.அழகிரி சாமி, தஞ்சை மாநகர துணை தலைவர் செ. தமிழ்ச்செல்வன், மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன், தஞ்சை தெற்கு ஒன்றிய செய லாளர் அ. இராமலிங்கம், ஒன்றிய துணைத் தலைவர் நா.வெங்கடே சன், ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய தலைவர் த. ஜெக நாதன், தெற்கு ஒன்றிய செயலாளர் மாநல். பரம சிவம், தெற்கு ஒன்றிய துணைத் தலைவர் கு.நேரு, தெற்கு ஒன்றிய விவசாய அணி தலைவர் ம. மதியழகன், திருச்சி மாவட்ட தலைவர் ஞா. ஆரோக்கியராஜ், திருச்சி மலர்மன்னன் ப.லே.மதிவாணன், போட்டோ மூர்த்தி, திருப்பனந்தாள் ஒன்றிய கழக தலைவர் நா.கலியபெருமாள், கை.மு.அறிவுச்செல்வன், ஒரத்தநாடு இராவணன், உள்ளிட்ட கழகத் தோழர் கள் மறைந்த சண்முகசுந் தரம் அவர்களின் உட லுக்கு மாலை வைத்து திராவிடர் கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை செலுத்தினர்.
தஞ்சை மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, பெரியார் மணியம்மை பல்கலைக் கழக துணைவேந்தர் வேலுச்சாமி, பதிவாளர் சிறீவித்யா, பேராசிரியர் கள் செந்தமிழ் குமார், இளங்கோ உள்ளிட்ட ஊழியர்கள் மற்றும் உற வினர்கள், நண்பர்கள், வங்கி ஊழியர்கள் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.
22-.1.2024 மாலை 4 மணி அளவில் இறுதி ஊர்வலம் புறப்பட்டு தஞ்சை மின் மயானத்தில் உடல் எரியூட்டப்பட்டது.