ஆசிரியர் அவர்களின் முகநூலை (Facebook) பார்த்து நம் தோழர்கள் அனைவரும் Like பண்ணுங்க, comment பண்ணுங்க, இது இக்காலத்தில் மிக அவசியம்
ஆசிரியர் அவர்களின் முக நூல் பக்கத்தில், தந்தை பெரியார் கருத்துகளையும், திராவிட சித்தாந்த கருத்துகளையும்,தன் கருத்துகளையும் ஆசிரியர் பதிவிடும் போது, அந்த கருத்துகள் என்ன? என்று கூட படிக்காமல் தரம் தாழ்ந்த விமர்சனங்களையும், அருவருக்கத்தக்க விமர்சனங்களையும் கூலிக்கு வேலை செய்யும் சங்கிகள் கூட்டம் தங்களின் விமர்சன (comment)த்தில் பதிவிடுகிறார்கள். இதையே தொடர் பணியாக செய்து வருகிறார்கள்.
ஆனால் நம் தோழர்களோ அல்லது ஒத்த கருத்துள்ள தோழர்களோ ஆசிரியர் கருத்தை ஆதரித்து அதிகமான பதிவுகளை பதிவிடுவதில்லை.
ஆசிரியர் அவர்களின் முக நூல் பக்கத்தை கவனிக்கிறார்களா? என்று தெரியவில்லை. அவரவர் முகநூல் பக்கங்களில் சிறப்பாக பதிவிடும் தோழர்கள் ஆசிரியர் அவர்களின் முக நூல் பக்கத்தையும் தினமும் பார்வையிட்டு தங்களின் கருத்துகளை பதிவிடுங்கள்.
நாம் எவ்வளவு தான் பொதுக் கூட்டங்கள், ஆர்ப் பாட்டங்கள், தெரு முனை பிரச்சாரங்கள் செய்தாலும், இக் கால கட்டத்தில் இணைய வழி பிரச்சாரம் என்பது மிக மிக முக்கியமானது.
இணைய வழி பிரச்சாரம் தான் இக்கால இளை ஞர்கள் இடத்திலும், மாணவிகள் இடத்திலும் எளிதாக நம் கருத்துகளை கொண்டு சேர்க்க முடியும்.
இதை சங்கிகள் கூட்டம் மிகச் சரியாக பயன் படுத்துகிறார்கள்.
இதற்கென்றே சங்கிகள் கூட்டத்திற்கு கூலி கொடுத்து அதையே ஒரு பிரச்சாரமாக செய்கிறார்கள். இதற்காக கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்கிறார்கள். அவர்கள் நம் கருத்துகளுக்கு மாற்று கருத்துகளைகூட பதிவிடுவதில்லை .மாறாக தனி மனித, ஒழுக்கங்கெட்ட, தரம் தாழ்ந்த பதிவுகளை பதி விடுகிறார்கள். இதை ஒரு தலையாய பணியாக செய்கிறார்கள்.
நாம் பணம் செலவு செய்து நம் கருத்துகளை பரப்ப வேண்டிய அவசியம் நமக்கில்லை. நம் பணி சமூக சீர்திருத்த பணி, நம் முன்னேற்றதிற்கான பணி, ஆகவே தோழர்கள் நாம் அனைவரும் தினம் 24 மணிநேரத்தில் ஒரு 5 நிமிடம் ஒதுக்கி ஆசிரியர் முக நூல் பக்கத்திற்கு சென்று ஆசிரியர் கருத்திற்கு வலு சேர்க்கும் விதமாக தங்கள் பதிவுகளை பதிவிடுங்கள். அதற்கென்று சங்கிகள் செய்யும் தரம் தாழ்ந்த பதிவுகளை போன்று பதிவிட வேண்டாம்.
அந்த தரம் தாழ்ந்த பதிவுகளை பதிவிடும் அறியாமையில் இருக்கும் முட்டாள் கூட்டத்திற்கும் சேர்த்து தான் நம் பகுத்தறிவு பணி உள்ளது என்று அவர்கள் உணரும் விதமாக பதிவிடுங்கள்.
நாம் இந்த கடமையை செய்ய மறந்தால் நாம் கவனிக்காமல் இருந்தால் நம் எதிரிகளின் கருத்து களுக்கு வலு சேர்க்கும் விதமாக அமையும் ஆபத்து உள்ளது. பொதுவில் பார்க்கும் மக்களிடையே தவறான கருத்துகள் போய் சேர வழிவகுக்கும்.
ஆகவே தோழர்களே
ஆசிரியர் அவர்களின் முகநூலை (Facebook) பார்த்து நம் தோழர்கள் அனைவரும் Like பண் ணுங்க, comment பண்ணுங்க.
ஆசிரியரை பின் தொடர்வோம்..
தந்தை பெரியாரின் கொள்கையை நிலை நிறுத்துவோம்..
சமத்துவ – சகோதரத்துவ – சனநாயக – சமூக நீதி- உலகை படைப்போம்..
– பெ. கலைவாணன்
கழக மாவட்ட செயலாளர், திருப்பத்தூர்