சென்னை,ஜன.23- தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை குறித்து உண்மைக்கு மாறான செய்தி வெளியிட்ட நாளிதழ் மீது தமிழ்நாடு அரசு சார்பில் சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட் டுள்ள ராமர் கோவிலுக்கு குட முழுக்கு விழா நேற்று (22.1.2024) நடைபெற்றது. அதனையொட்டி, தமிழ்நாட்டு கோவில்களில் சிறப்பு பூஜைகளும், அன்னதானமும் நடத்துவதற்கு தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை வாய்மொழியாக தடை விதித் துள்ளது என தினசரி நாளிதழ் ஒன்றில் தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஆலயப் பணிகளை அனைவரும் போற்றும் வகையில் நிறைவேற்றி வரும் தமிழ்நாடு அரசுக்கு அவப் பெயர் ஏற்படுத்திடும் தீயநோக்கத் துடன் உண்மைக்கு மாறான செய் தியை வெளியிட்டு, பொதுமக்க ளிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, அரசு மீது வெறுப்பைத் தூண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அந்த நாளிதழின் இச்செயல் மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு 2021-இல் பொறுப் பேற்றது முதல் இந்து சமய அற நிலையத்துறையின் பணிகளில் ஒரு சிறு குறையும் ஏற்படக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. சுமார் 400 ஆண்டு களுக்குப்பின், கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு ஆதி கேசவ பெருமாள் திருக்கோவில் உட்பட 1,270 திருக்கோவில்களுக்கு முதலமைச்சரின் அறிவுரையின்படி திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு விழாக்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளன. இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் 764 திருக்கோவில்களில் நாள்தோறும் அன்னதானம் வழங் கும் பணிகள் நடைபெற்று பக்தர்கள் பயனடைந்து வருகிறார்கள்.
ஆயிரம் ஆண்டுகள் தொன்மை யான திருக்கோவில்களை புனர மைத்திடும் வகையில் 2022-_2023-ஆம் நிதியாண்டில் 113 திருக்கோ வில்கள் ரூ.154.90 கோடி மதிப் பீட்டிலும், 2023-_2024 ஆம் நிதி யாண்டில் 84 திருக்கோவில்கள் ரூ.149.95 கோடி மதிப்பீட்டிலும் புனரமைத்து பாதுகாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்து சமய வழிபாட்டு உணர்வுகளில் ஊறியுள்ள தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த உண்மை புரியும். மாற்றுக் கருத்துடைய எதிர்க்கட்சிகள் கூட இதனை மறுக்க முடியாது.
இந்நிலையில் திருக்கோவில் பணிகளை மிகச்சிறப்பாக நிறை வேற்றி, நாள்தோறும் மக்களின் பாராட்டுகளைப் பெற்றுவரும் தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அப்பட்ட மான வேண்டுமென்றெ உள்நோக் கத்துடன் பொய்ச் செய்தியை வெளியிட்டுள்ள செயல் மிகவும் கண்டிக் கத்தக்கதாகும். இத்தகைய தவறான, உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்ட அந்த நாளிதழ் மீது தமிழ்நாடு அரசு சார்பில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.”
-இவ்வாறு தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.