தலைமைக் கழக அமைப்பாளர் ஈரோடு.த.சண்முகம், தாராபுரம் கழக மாவட்ட தலைவர் கிருஷ்ணன், கணியூர் ஒன்றிய தலைவர் தங்கவேல், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இனியன் ஆகியோர் ‘விடுதலை’ ‘உண்மை’ சந்தாக்களை தமிழர் தலைவரிடம் வழங்கினர். (சென்னை – 14.10.2023)
பத்திரிகையாளர் அறிவழகன் – பிரியா ஆகியோருக்கு இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தைக்கு, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அ.பி. ஆற்றல் என பெயர் சூட்டினார். பெயர் சூட்டியதன் மகிழ்வாக விடுதலை நாளிதழுக்கு சநதா வழங்கினர். (சென்னை – 14.10.2023)
திருவண்ணாமலை மாவட்டக் காப்பாளர் வேட்டவலம் பி. பட்டாபிராமன் குடும்பத்தினர் ப. வசந்தி, தி. பிரசன்னா, தி. ஹரினி, கு. வெங்கடேசன், இதயா, தாமினி, தரணி ஆகியோர் தமிழர் தலைவரை சந்தித்து மகிழுந்து (கார்) வாங்கியதன் மகிழ்வாக விடுதலைக்கு சந்தா மற்றும் நன்கொடைகளை வழங்கினர். (சென்னை – 14.10.2023)