உதயநிதி ஸ்டாலின் வர்ணனை
சேலம், ஜன. 22- சேலத்தில் நேற்று (21.1.2024) நடந்த திமுக இளைஞரணி மாநாட்டில், மாநில உரிமையை காக்க 22 தலைப்புகளில் பேச்சாளர்கள் பேசினர்.
ஆனால் ராமேஸ்வரத்தில் ஒருவர் 22 கிணறுகளில் நீராடிவிட்டு ராமநாத சுவாமி பாக்க போயிட்டு இருக்காரு என்று உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.
சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு நேற்று (21.1.2024) நடந்தது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலை மையில் மிக பிரமாண்டமாக நடந்தது. மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
மாணவர்களுடைய மருத்துவர் ஆகும் கனவை பறிக்கின்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று சென்ற ஆண்டு ஆகஸ்டு மாதம் 20 ஆம் தேதி நீட் தேர்வு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் திமுக இளைஞ ரணியினர் பட்டினிப் போராட்டம் இருந்தோம்.
அதோடு விடாமல் மக்கள் போராட் டமாக மாற்ற வேண்டும் என்று நீட் தேர்வு கையெழுத்து இயக்கத்தை ஆரம்பித்தோம். அப்போது தலைவரி டம் சொன்னோம். 50 நாளில் 50 லட்சம் கையெழுத்துகளை பெறுவோம் என்று.. ஆனால் 80 லட்சம் கையெழுத்து களை பெற்றுள்ளோம்.
இதனை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால், டில்லியில் சென்று போராட்டம் நடத் தவும் திமுக இளைஞரணியினர் தயா ராக இருக்கிறார்கள்.
மாநில உரிமைகளை பறிப்பதையே ஒன்றிய அரசு முழு வேலையாக செய்து கொண்டு இருக்கிறது. அதற்காக தான் மாநில உரிமைகள் மீட்பு முழக்கம் என்று இந்த மாநாட்டை நாம் நடத்துக்கிறோம்.
அடிமை அதிமுக உதவியோடு, தவழ்ந்து தவழ்ந்து முதலமைச்சர் ஆன பழனிசாமி மூலம் தான் நம்முடைய உரிமைகளை ஒன்றிய அரசு பறித்தது. வெளியுறுவுத்துறை ராணுவம் மட்டும் ஒன்றிய அரசிடம் இருந்தால் போதும் என்பது தான் திராவிட மாடல் அரசின் கொள்கை.
ஆனால், இன்றைக்கு எல்லா துறை களையும் ஒன்றிய அரசு கையில் வைத்திருக்கிறது. கல்வி, சுகாதாரம் என எல்லா துறையையும் மாநில அரசின் உரிமைகளை சட்டத்திற்கு புறம்பாக கையில் வைத்திருக்கிறது. குறிப்பாக வரி வருவாய். நம்மிடம் அதிமாக வருவாயை பெற்றுக்கொண்டு திருப்பி கொடுப்ப தில்லை.
நாம் 1 பைசா ஒன்றிய அரசுக்கு வரியாக செலுத்தினால் வெறும் 29 காசு தான் என்றார்.
சமத்துவம், சமூக நீதியை முன்வைத்து சேலம் மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் சொன்ன குட்டிக் கதை!
இதேபோல் நாம் கடந்த 9 ஆண்டுகளில் ஒன்றிய அரசுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் வருவாய் வரியாக கட்டியிருக்கிறோம். ஆனால் அவர்கள் நமக்கு திருப்பி தந்தது 2 லட்சம் கோடி தான். இந்த நேரத்தில் ஒன்றிய அரசுக்கு ஒன்றே ஒன்றை கூறிக்கொள்கிறேன்.
இந்த முயற்சியை 2000 ஆண்டாக முயற்சி செய்கிறீர்கள். ஆனால், உங்க ளால் இதுவரை தமிழ்நாட்டில் கால் வைக்க முடியவில்லை. இந்த முயற்சி யால் இன்னும் 2000 ஆண்டுகள் ஆனாலும், வெற்றி பெற முடியாது.
தமிழரின் அடையாளத்தை அழிக்க நினைத்தால் நீங்கள் தான் அழிந்து போவீர்கள். உங்கள் எண்ணத்தை ஒருபோதும் திமுக அனுமதிக்காது. ஏனென்றால், இந்த இயக்கத்தை தற் போது வழிநடத்துவது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற மாபெரும் தலைவர்.
ராமேசுவரத்தில் ஒருவர் 22 கிணறுகளில் நீராடிவிட்டு ராமநாத சுவாமி பாக்க போயிட்டு இருக்காரு.. ஆனா நாம இங்க மாநில உரிமையை காக்க 22 தலைப்புகளில் நம்முடைய பேச்சாளர்கள் நடத்திய உரை கிழவர் ராமசாமியை நோக்கியுள்ளது.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.