கண்ணந்தங்குடி கீழையூரில் தை 1 தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா
மோகனா வீரமணி கல்வி அறக்கட்டளை 20 ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா
கவிஞர் நந்தலாலா தலைமையில் பட்டிமன்றம்
திரைக் கலைஞர் துரை.சுதாகர் அறக்கட்டளைக்கு ரூ 50,000 அளித்து பாராட்டுரை
தொகுப்பு:
முனைவர் வே.ராஜவேல்
கண்ணந்தங்குடி கீழையூர், ஜன. 21- தஞ்சாவூர் மாவட்டம் உரத்தநாடு வட்டம் கண்ணந்தங்குடி கீழையூர் திராவிடர் கழகம் சார்பில் 15.01.2024 அன்று மாலை 6 மணி அளவில் தை-1 தமிழ் புத்தாண்டு, பொங்கல் விழா, திராவிடர் திருநாள், கே.ஆர்.சி. நினைவு பெரியார் படிப்பகம் 20ஆம் ஆண்டு விழா, மோகனா வீரமணி கல்வி அறக்கட்டளை 20ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா, அறிவார்ந்த பட்டிமன்றம் என மிக எழுச்சியோடு நடைபெற்றது, கண்ணந்தங்குடி கீழையூர் பெரியார் படிப்பகம் அருகில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு தஞ்சாவூர் மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமையேற்று உரையாற்றினார்.
தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருதாளர் கோ.செந் தமிழ்ச்செல்வி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்,
கண்ணந்தங்குடி கீழையூர் கழகத் தோழர்கள் அரங்க. குமரவேலு, மாநில கழக இளைஞரணி துணை செயலாளர் இரா.வெற்றிக்குமார், இரா.சிவக்குமார், தஞ்சை தெற்கு ஒன்றிய துணைத் தலைவர் நா.வெங்கடேசன், கிளைக் கழக தலைவர் இரா.செந்தில்குமார், கிளைக் கழக செயலாளர் பா.தாமரைக்கண்ணன், ஊராட்சி கிளைக் கழக தலைவர் அ.திருநாவுக்கரசு, வடக்கு ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் இரா.இராஜதுரை, வடக்கு ஒன்றிய மாணவர் கழக செயலாளர் க.செழியன் ஆகியோர் முன்னிலை ஏற்று சிறப்பித்தனர்.
பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு
நிகழ்ச்சி தொடக்கத்தில் கே.ஆர்.சி.நினைவு பெரியார் படிப்பகத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு, கழகத் தோழர்கள், ஊர் பொதுமக்கள், ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் கவிஞர் நந்தலாலா, திரைப்பட நடிகர் துரை.சுதாகர் ஆகியோர் மாலை அணிவித்து சிறப் பித்தனர்
சிறப்பு விருந்தினரின் பாராட்டுரை
தஞ்சாவூர் நிலா புரமோட்டர்ஸ் உரிமையாளர், திரைப் பட நடிகர் துரை.சுதாகர், தஞ்சை ஹெரிடேஜ் ரோட்டரி சங்க தலைவர், கழக தஞ்சை மாநகர துணைத் தலைவர் செ.தமிழ்ச்செல்வன், கழக தகவல் தொழில்நுட்ப அணி மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம் ஆகியோர் தொடர்ந்து இருபது ஆண்டுகளாக இடைவிடாது தொய் வின்றி ஒவ்வொரு ஆண்டையும் மிஞ்சும் அளவிற்கு மிகச் சிறப்பாக பொங்கல் விழாவினை நடத்திவரும் தோழர்களை பாராட்டியும், 2022-2023 கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் கண்ணந்தங்குடி கீழையூர் மற்றும் கண்ணந் தங்குடி மேலையூர் பள்ளிகளில் முதல் மூன்று மதிப்பெண் களை பெற்ற மாணவர்களுக்கு மோகனா வீரமணி கல்வி அறக்கட்டளை சார்பில் பாராட்டு சான்றிதழும், ஊக்கத் தொகை வழங்கியும் கண்ணந்தங்குடி கீழையூர் அரசு உயர் நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தனிப்பயிற்சிக்கு ரூ.10,000 வழங்கியும் பாராட்டுரையாற்றினர்
உரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் அ.சுப்பிர மணியன், உரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் இரா.துரை ராசு, தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, கண்ணந் தங்குடி கீழையூர் ஊராட்சி மன்ற தலைவர் சி.மாரிமுத்து, கழக காப்பாளர் மு. அய்யனார், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன், திமுக மாநில மருத்துவர் அணி துணை செயலாளர், தஞ்சை மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் தொடர்ந்து இருபது ஆண்டுகளாக நடைபெற்று வரும் பொங்கல் விழா மற்றும் மோகனா வீரமணி கல்வி அறக்கட்டளை பரிசளிப்பு விழா ஆகியவற்றை பாராட்டியும் 2022-2023 கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு கண்ணந்தங்குடி கீழையூர் மற்றும் கண்ணந்தங்குடி மேலையூர் பள்ளிகளில் படித்து முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற மாணவர்களையும் பாராட்டியும் உரையாற்றினர்.
மாநில கழக ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் கண்ணந்தங்குடி கீழையூர் கழக செயல்பாடுகள் குறித்தும், மோகனா வீரமணி கல்வி அறக்கட்டளையின் தொடக்கம் மற்றும் வளர்ச்சி குறித்தும் உரையாற்றி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார்
பரிசு பெற்ற மாணவர்கள்
கண்ணந்தங்குடி கீழையூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள்
முதல் மதிப்பெண்- சு.வினோதா, இரண்டாம் மதிப் பெண்-ரா.மகாதேவி, மூன்றாம் மதிப்பெண்-பி.நகுலன்.
கண்ணந்தங்குடி மேலையூர் உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள்
முதல் மதிப்பெண்- சு.சித்தார்த்தன், இரண்டாம் மதிப்பெண்-ஷாலினி, மூன்றாம் மதிப்பெண்-இரா.அஞ்சலி ஆகியோருக்கு முதல் பரிசு ரூ.5,000, இரண்டாவது பரிசு ரூ.3,000, மூன்றாம் பரிசு ரூ.2,000 என மோகனா வீரமணி கல்வி அறக்கட்டளை சார்பில் 6 மாணவர்களுக்கும் ரூ.20,000 ஊக்கத் தொகையும் பாராட்டு சான்றிதழும் வழங்கி பாராட்டப்பட்னர்.
அறிவார்ந்த பட்டிமன்றம்
மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கக் கூடிய வகையில் “பொங்கல் விழா ஊட்டும் விஞ்சிய உணர்வு திராவிடர் உரிமையே! உழவர் அருமையே!” எனும் அறிவார்ந்த பட்டிமன்றத்தின் நடுவரான திருச்சி கவிஞர் நந்தலாலா, மிக சிறப்பாக தனது தொடக்க உரையில் சமத் துவ பொங்கல் அருமை குறித்தும், திராவிட இயக்கத்தின் எழுச்சி குறித்தும், பல்வேறு கருத்துகளை எடுத்துக் கூறி உரையாற்றினார்
“திராவிடர் உரிமையே” எனும் தலைப்பில் மாநில கிராம பிரச்சார அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், கழகப் பேச்சாளர் தி.என்னாரெசு பிராட்லா, “உழவர் அருமையே” எனும் தலைப்பில் கழகப் பேச்சாளர்கள் இராம.அன்பழகன், சு.சிங்காரவேல் ஆகியோர் கலந்து கொண்டு மிகச்சிறந்த கருத்துகளுக்கிடையே பாடல்களைப் பாடி, சிறப்பான வாதங்களை முன்வைத்து தங்கள் அணிக்கு வலு சேர்த்தனர்
பொங்கல் விழா ஊட்டும் விஞ்சிய உணர்வுக்கு உழவர் அருமையே ஆதாரமாக இருந்தாலும் பொங்கல் விழாவை எழுச்சி விழாவாக கொண்டாடிட விஞ்சிய உணர்வாக திகழ்வது திராவிடர் உரிமையே என கவிஞர் நந்தலாலா தீர்ப்பு கூறி உரையை நிறைவு செய்தார்
இந்நிகழ்வின் தொடக்கத்தில் பேராசிரியர் க.சுடர் வேந்தன் வழங்கிய “மந்திரமா? தந்திரமா?” எனும் அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
கண்ணந்தங்குடி கீழையூர் மகளிர் அணி தோழியர்
வி. பெரியார்செல்வி நன்றி கூறினார்
கலந்து கொண்டவர்கள்
கழககாப்பாளர் காரைக்குடி சாமி.திராவிட மணி, மாநில ப.க. ஊடகத்துறை தலைவர் மா.அழகிரிசாமி, மன்னார்குடி கழக மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், கும்ப கோணம் கழக மாவட்ட தலைவர் கு.நிம்மதி, மன்னார்குடி கழக மாவட்ட செயலாளர் கோ.கணேசன், கும்பகோணம் கழக மாவட்ட செயலாளர் சு.துரைராசு, மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன் மாநில ப.க.அமைப்பாளர்கள் கோபு.பழனிவேல், கோலில்வெண்ணி சி. இரமேஷ், நாகை முத்துகிருஷ்ணன், ஆவடி மாவட்ட செயலாளர் இளவரசன், மாநில இளைஞரணி துணை செயலாளர் முனைவர் வே.இராஜவேல், மாநில மாணவர் கழக செயலாளர்
இரா.செந்தூரப்பாண்டியன், மாநில வீதி நாடக கலைக்குழு அமைப்பாளர் பி.பெரியார்நேசன், பெரியார் சமூகக் காப்பணி மாநில இயக்குநர் தே.பொய்யாமொழி, குடந்தை கழக மாவட்ட துணைத் தலைவர் வ.அழகுவேல், பொதுக்குழு உறுப்பினர் காரைக்குடி ஜெயா திராவிடமணி, காரைக்குடி ஜான்சி ராணி, காரைக்குடி டார்வின் என்.ஆர்.எஸ்., மன் னார்குடி கழக மாவட்ட அமைப்பாளர் ஆர்.எஸ்.அன்பழகன், மாவட்ட துணை செயலாளர் அ.உத்திராபதி, திருவோணம் ஒன்றிய தலைவர் சாமி.அரசிளங்கோ, உரத்தநாடு நகர தலைவர் பேபி ரெ.ரவிச்சந்திரன், மாவட்ட இளைஞரணி தலைவர் ரெ.சுப்பிரமணியன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பேபி ரெ.ரமேஷ், மாவட்ட பகுத்தறிவு கலை இலக்கிய அணி தலைவர் வெ.நாராயணசாமி, மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் அ.கலைச்செல்வி, மாவட்ட ப.க. அமைப்பாளர் கு.கவுதமன், மாவட்ட ப.க. இணைச் செயலாளர் ஆ.லட்சுமணன், மாவட்ட ப.க.துணைச் செயலா ளர் ஜெ.பெரியார்கண்ணன், தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன், தஞ்சை வடக்கு ஒன்றிய தலைவர் பா.சுதாகர், உரத்தநாடு வடக்கு ஒன்றிய இளைஞரணி தலைவர் நா.அன்பரசு, உரத்தநாடு தெற்கு ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளர் வன்னிப்பட்டு செந்தில்குமார், உரத்த நாடு நகர இளைஞரணி செயலாளர் மா.சாக்ரடீஸ், பெரியார் பெருந்தொண்டர் நெடுவாக்கோட்டை தோ.தம்பிக்கண்ணு, உரத்தநாடு வடக்கு ஒன்றிய துணை செயலாளர் கக்கரை கோ.ராமமூர்த்தி, க.ஆதவன், நெடுவை வே.விமல், சூலிய கோட்டை உத்திராபதி, மணமேல்குடி ஒன்றிய இளைஞரணி தலைவர் யோவான்குமார், நெடுவாக்கோட்டை வி.புதிய வன், தெற்கு நத்தம் அன்பழகன், ஒக்கநாடு மேலையூர் திருப்பதி, மன்னார்குடி கழக மாவட்ட ப.க. ஆசிரியர் அணி தலைவர் தா.வீரமணி, நீடா மங்கலம் ஒன்றிய தலைவர் தங்க. பிச்சைக்கண்ணு, மன்னார் குடி மாவட்ட இளைஞரணி தலைவர் க.ராஜேஷ்கண்ணன். நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் சா.அய்யப்பன், நீடா மங்கலம் நகர இளைஞரணி தலைவர் இரா.அய்யப்பன், மன்னார்குடி மாவட்ட இளைஞரணி தோழர்கள் கோயில்வெண்ணி சரவணன், சோத்திரை த.சாருகாசன், பூவனூர் கூத்தரசன், மன்னார்குடி மணிகண்டன், திப்பியக் குடி கோவிந்தராஜ், மாவட்ட துணைத் தலைவர் நா.இன்பக் கடல், மாவட்ட துணை செயலாளர் வி.புட்பநாதன், கவின் செல்வம், சேதுராயன் குடிக்காடு ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரன், மாவட்ட திமுக வழக்குரைஞர் அணி துணை அமைப்பாளர்
தவ.ஆறுமுகம், உரத்தநாடு நகர மன்ற உறுப்பினர்
ஷேக்.முகமதுகனி, கண்ணந்தங்குடி மகளிர் அணி தோழர் கள் ஜெ.ஜெகதாராணி, கு.கலைச்செல்வி செ.காலாலட்சுமி, பெரியார் பிஞ்சுகள் ஜெ.ஜெ.கவின், செ.சி.காவியன்,
க.செ.கபிலன், ஜெ.ஜெ. காவியா, க.செ.கவுசல்யா, செ.சி.கண் மணி, அ.வெ.கயல், அ.வெ.கருணாநிதி, கு.அறிவன்,
ப, வெ.அனந் திகா, எழந்தவெட்டி க.ஆதவன் மற்றும் கழகப் பொறுப் பாளர்கள் தோழர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஊரே விழாக்கோலம் பூண்டது
தமிழ் புத்தாண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு உரத்தநாடு முதல் கண்ணந்தங்குடி கீழையூர் வரை 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பதாகைகள் (பிளக்ஸ்), கழகக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. விழா நடைபெறும் இடத்தை சுற்றி ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் பொழுது வாணவேடிக் கைகள் நடத்தப்பட்டன.
ஊர் முழுவதும் ஒலிபெருக்கி அமைக்கப்பட்டிருந்தது. ஊரே விழாக் கோலமாகத் திகழ்ந்தது.