இன்று புரட்சியாளர் லெனின் 100-ஆவது நினைவு நாள் [22.04.1870 – 21.01.1924]
அரசியல் பத்திரிகை யானது ஒரு பரப்புரை யாளராகவும், கிளர்ச்சி யாளராகவும், அமைப்பாள ராகவும் இருக்க வேண்டும் என்றார் லெனின். அத் தகைய ஒரு பத்திரிகை தொடங்கப்பட்டால் நாட் டையே வசப்படுத்திவிட முடியும் என்று நம்பினார்.1900- ஆவது ஆண்டு டிசம்பரில் தீப்பொறி (இஸ்க்ரா) என்ற பெயரில் ஓர் இதழைத் தொடங்கினார். முதல் இதழில் லெனின் பின் வருமாறு எழுதினார்: “”வல்லமை மிக்க எதிரியின் கோட்டை நம் கண்முன்னே உயர்ந்தோங்கி நிற்கிறது. நம்மீது வெடிகளையும் குண்டுகளையும் பொழிந்து, நம் சிறந்த போராட்ட வீரர்களை வீழ்த்தி வருகிறது. இந்தக் கோட்டையை நாம் பிடித்தாக வேண்டும்.
லெனினது முயற்சியில் சட்டப்பூர்வ ஏடாக “பிராவ்தா’ (உண்மை) 1912-ஆம் ஆண்டு வெளி யிடப்பட்டது. 1914-ஆம் ஆண்டு முதல் உலகப் போர் வெடித்தது. உலகத்தை மறுகூறுபோட ஏகாதிபத்திய கொள்ளைக் காரர்களுக்கிடையே யுத்தம் வெடிக்கப் போகிறது என்று லெனின் முன்னதாக எச்சரித் திருந்தார். யுத்தப் பின்னணியில் “சோஷல் டெமாக் கிரேட்’ என்ற பத்திரிகையைத் தொடங்கினார் லெனின்.
1917, பிப்ரவரியில் நடந்த முதலாளித்துவ ஜன நாயகப் புரட்சி ஜாராட்சியைத் தூக்கி எறிந்தது.இது அக்டோபர் ஷோலிசப் புரட்சிக்கு முன்னோடி யானது. லெனினது தொலைநோக்குப் பார்வை!