திருநெல்வேலி வருகைதரும் தமிழர் தலைவருக்கு எழுச்சிமிகு வரவேற்பு!
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் 16.10.2023 திங்கள் கிழமையன்று மாலை அய்ந்துமணிக்கு , சேரன்மகாதேவி குருகுலப்போராட்டநூற்றாண்டுவிழா,
திராவிட முன்னேற்றக் கழக அறச்செம்மல் பத்தமடை ந.பரமசிவம் அவர்களுக்கு பாராட்டுவிழா,
தாய்வீட்டில் கலைஞர் நூல் வெளியீட்டு விழா மாவட்ட திராவிடர் கழக தலைவர் ச.இராசேந்திரன் தலைமையில் எழுச்சியோடு நடைபெற உள்ளது.
மாவட்டச் செயலாளர் இரா. வேல்முருகன் வரவேற்புரை யாற்றுகிறார்.
இவ் விழாவில் பங்கேற்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.
நிதி மற்றும் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தாய் வீட்டில் கலைஞர் நூலினை வெளியிட்டு நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் இரா.ஆவுடையப்பன், அறிவாசான் தந்தை பெரியார் படத்தினை திறந்து வைத்து உரையாற்றுகிறார்
திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் டி. பி. எம். மைதீன்கான் வாழ்த்துரை வழங்குகிறார்.
நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம், திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், மாவட்ட திமுக அவைத்தலைவர் எம் .கிரகாம்பெல், தலைமை கழக அமைப்பாளர்கள் மதுரை .வே.செல்வம், ராஜபாளையம் இல. திருப்பதி மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கே. டி. சி. குருசாமி
காப்பாளர்கள் சீ..டேவிட் செல்லதுரை, சி.வேலாயுதம் மா.பால்இராசேந்திரம், சு.காசி, காங்கிரஸ் கட்சி மேனாள் ஒன்றிய அமைச்சர் இரா.தனுஷ்கோடிஆதித்தன், புறநகர் மாவட்ட மதிமுக செயலாளர் எம்.ரெய்மண்ட், சி.பி.அய்.மாவட்டச் செயலாளர்செ.இலட்சுமணன், சி.பி.எம்.மாவட் டச் செயலாளர் சிரிராம், விசிக மாவட்டச்செயலாளர் எம்.சி. சேகர், கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிர மணியம், மாவட்டச் செயலாளர் கோ .வெற்றி வேந்தன், தூத்துக்குடி மாவட்ட தலைவர் மு.முனியசாமி, மாவட்ட செயலாளர் கோ. முருகன், தென்காசி மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் த.வீரன், மாவட்டச் செயலாளர் வே. முருகன் மற்றும் முன்னாள்,இன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளார்கள்.
இறுதியில் சேரன்மகாதேவி ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் கோ.செல்வ சுந்தர சேகர் நன்றி கூறுகிறார்.
கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன், காப்பாளர் இரா.காசி உள்ளிட்ட விழாக் குழுவினர் விழா சிறக்க களப்பணியாற்றி வருகிறார்கள்.
விழாவில் சிறப்புரையாற்ற 16 -ஆம்தேதி காலை திரு நெல்வேலி வருகை தரும் வணக்கத்துக்குரிய தமிழர் தலை வருக்கு மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சிறப்பான வர வேற்பு அளிக்கப்பட உள்ளது. இளைஞரணி, மாணவரணி, மகளிர் அணி, பகுத்தறிவாளர் கழகம் உள்ளிட்ட அனைத்து அணியினரும் வருகைதர கேட்டுக் கொள்கிறோம்.
-ச. இராசேந்திரன், மாவட்டத் தலைவர்
இரா.வேல்முருகன், மாவட்டச் செயலாளர் திராவிடர்கழகம், திருநெல்வேலி மாவட்டம்