கருவறையில் மோடி!

viduthalai
1 Min Read

அயோத்தியில் கட்டி முடிக்கப்படாமல் இருக்கும் ராமன் கோவில் திறப்பு விழா ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த ராமன் கோவில் பிரதிஷ்டையை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று கோவில்களில் வழிபாடு நடத்தி வருகிறார்.

அதன் ஒருபகுதியாக ஜனவரி 21 ஆம் தேதி தமிழ்நாட்டின் சிறீரங்கம், இராமேசுவரம் கோவில்களில் மோடி தரிசனம் செய்ய உள்ள நிலையில், ‘‘சிறீரங்கம் கோயில் கருவறைக்குள் பிரதமர் மோடியை அனுமதிப்பது ஆகமத்துக்கு எதிரானது” என கோவில்கள் தொடர்பாக பொதுநல வழக்கு தொட ரும் சிறீரங்கத்தைச் சேர்ந்த மூத்த அர்ச்சகர் ரங்கராஜன் நரசிம்மன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் ‘எக்ஸ்’ பக்கத்தில் அவர், “சிறீரங்கம் கோவில் கருவறைக்குள் யாரும் நுழைந்துவிட முடியாது. சாமி சிலைக்கு மலர்கள் உள்ளிட்டவற்றால் நேரடியாக பூஜை செய்ய முடியாது.”

‘‘இந்தக் கருவறைக்குள் போவது, சிலைக்கு பூஜை செய்வது அர்ச்சகர்கள்தான். அர்ச்சகர்கள்தான் ஆரத்தி காட்ட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைச் சட்டம் தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்டபோது, இது ஆகமத்துக்கு விரோதம் என்று ஊளையிட்ட ஊடகங்கள், பார்ப்பனர்கள் இப்பொழுது வாயைப் பிளாஸ்டர் போட்டு ஒட்டிக்கொண்டு இருப்பது ஏன்? ஏன்?
பிரதமர் என்பதால் ஆகமங்கள் பதுங்கிவிட்டனவா?

ராமன் சிலையைத் தொட்டு பிரதிஷ்டை செய்ய இருக்கிறார் பார்ப்பனரல்லாதாரான பிரதமர் மோடி! இதனை மோடியும் உள்வாங்கிக் கொள்ளவேண்டும். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்பதை இந்தியா முழுவதும் நீட்டிப்பாரா? ஆகமம் பேசும் அக்கிரகாரவாசிகளும் அடங்கவேண்டும்.

– மயிலாடன்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *