மேற்படி சங்கக் கமிட்டி கூட்டம் 26.4.1936 ஞாயிற்றுக் கிழமை சங்கத் தலைவர் எம்.தர்மலிங்கம் தலைமையில், கூடியது. அப்போது கீழக்கண்ட தீர்மானங்கள் நிறை வேறின:-
1. பொது நலப் பிரியரும், சமதர்மவாதியுமான வாலிப வீரர் தோழர் டி.வி.சுப்ரமணியம் தம் 38 ஆம் வயதில் அகால மரணம் அடைந்ததை முன்னிட்டு இக்கூட்டம் வருந்துவதுடன், மேற்படியார் குடும்பத்திற்கு அனுதாபத் தையும் தெரிவித்துக் கொள்கிறது.
2. இச்சங்கத்தின் மெம்பர் கிறிஸ்தவ ஆதித்திராவிடத் தோழர் ஏ. அந்தோணி ராஜ் 24.4.1936 வெள்ளிக்கிழமை வழக்கம்போல், பல்லாவரம் – மாங்காளியம்மன் கோவில் தெருவில் அக்கிரகாரத்தில் வசிக்கும் ஒரு பிராமண உபாத் தியாயரிடம் பாடம் கற்றுக் கொண்டிருக்கும் பொழுது, அதே வீதியில் உள்ள ஒரு பார்ப்பனர், பறையன் அக்ர காரத்தில் ஏன் வந்தானென்று மேற்படி ராஜுவை செருப் பால் தாக்கியதாகக் கேள்விப்பட்டு இக்கூட்டம் மேற்படி பார்ப்பனரின் அடாத செயலை வன்மையாகக் கண்டிப்ப துடன் போலீஸ் அதிகாரிகளும் கவர்மெண்டாரும் இது விஷயம் குறித்து நடவடிக்கைகள் எடுத்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறது.
3. மே தினத்தை இச்சங்க ஆதரவில் கொண்டாட வேண்டுமென்று தீர்மானிக்கிறது.
– ‘விடுதலை’ – 29.4.1936
பல்லாவரம் வாலிபர் சங்கம் ஜாதி இந்து செய்கைக்குக் கண்டனம்
Leave a Comment