பொதிகை தொலைக்காட்சிக்கு டி.டி. தமிழ் என பெயர் மாற்றம் – பிரதமர் நரேந்திர மோடி இன்று (19.1.2024) தொடங்கி வைக்கிறார் என்று செய்தி வெளி வந்துள்ளது தமிழ்நாட்டில் தமிழில் இருந்த ஒரு பெயரை டி.டி. என்று அதாவது தூர்தர்ஷன் என்று ஹிந்தி மயம் ஆக்குவது ஏன்? இதற்கான செலவு 39 கோடியே 71 லட்சமாம் – இதுதான் மோடி அரசு தமிழுக்கு செய்கின்ற தொண்டா? இவற்றையெல்லாம் மக்கள் கவனிக்க மாட் டார்கள் என்ற நினைப்பா? தமிழ் மொழியின் மீது கை வைத்தால் அதன் விளைவு தேர்தலில் எதிரொலிக்கும் என்பதை மறக்க வேண்டாம்.