சென்னை, ஜன.19 சர்க்கரை ஆலைகளிலிருந்து 676 மெகாவாட் மின்சா ரத்தைக் கொள்முதல் செய்ய மின்வாரியம் ஒப் பந்தம் செய்துள்ளது.
தமிழ்நாட்டின் தினசரி மின் தேவைசராசரியாக 14 ஆயிரம் மெகாவாட்என்ற அளவில் உள்ளது. இது குளிர்காலத்தில் 8 ஆயிரம் மெகாவாட் அளவுக்குக் குறைந்தும், கோடை காலத்தில் 16 மெகாவாட் அளவுக்கு உயர்ந்தும் காணப்படும். இவ்வாறு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மின் தேவையைப் பூர்த்தி செய்ய மின்வாரியம் தனது சொந்த உற்பத்தியைத் தவிர, ஒன்றிய அரசு மின்னுற்பத்தி நிறுவனங்கள் மற்றும் தனியார் மின் னுற்பத்தி நிலையங்களிலிருந்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்கிறது. மின்வாரியம்கரும்பு சக்கையைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் சர்க் கரை ஆலைகளில் இருந்தும் மின்சாரம் கொள்முதல் செய்கிறது. இந்த மின்சாரத் தின் கொள்முதல் விலை ஒரு யூனிட் ரூ.5.52 ஆக உள்ளது. அதில், நிலை யான செலவு ரூ.2.25 ஆகவும், மாறும் செலவு ரூ.3.27 ஆகவும் உள் ளது. தற்போது புதிய மின் கொள்முதல் விலையை நிர்ணயித்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட் டுள்ளது. இதன்படி, 2023-_2024ஆ-ம் நிதியாண்டுக்கு ஒரு யூனிட் மின் கொள் முதல் விலை ரூ.5.90 ஆகவும், 2024-_2025-ஆம் ஆண்டுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.6.11 ஆகவும் நிர்ணயிக் கப்பட்டுள்ளது. இதையடுத்து, இரு வகைகளிலும் பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து 676 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்ய மின்வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளது என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.