அக்டோபர் 14 அன்று அம்பேத்கர் புத்தமதத்தை தழுவிய நாள். 2023 அக் டோபர் 14இல் மேரிலாந்து அக்கோக்கிக் நகரில் அவர் சிலை – 19 அடி சிலை statue of equality சமத்துவ சிலை திறப்பு விழா கொட்டும் மழையில் சிறப்புடன் நிறை வேறியது.
பல நூற்றுக்கணக்கான மக்கள் அமெ ரிக்காவின் பல மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வந்து குழுமியி ருந்தனர். நாங்கள் 5 மணி நேரம் மகிழ் ஊர்தியில் பயணம் செய்து அக்கோக்கிக் ஊருக்கு வந்து சேர்ந்தோம். இனிமையான மக்கள். நல்ல காலை உணவு அமைதியாக கூட்டம் ஆரம்பித்தது. நான்கு புத்த பிக்கு கள் கூட்டத்தை ஆரம்பித்து வைத்தனர். இது மத கூட்டமல்ல, சமூக நல கூட்டம் என்று தெளிவுப்படுத்தினர். அமெரிக்கா வில் புத்தமும் அம்பேத்கரும் எப்படி மக்கள் உரிமைக்கும் சமத்துவத்திற்கும் வழிகாட்டுவார்கள் என்பதைப்பற்றி விரி வாக எடுத்துரைத்தார்கள்.
ஜாதியைப்பற்றி முனைவர் மாலினி ஒரு புத்தகம் எழுதி வருகிறார். அவர் பெரியார் அய்யாவை நினைவு கூர்ந்தார். வடகரோலினா பல்கலைகழகத்திலி ருந்து செரமி என்ற அமெரிக்கர் மும்பையில் தங்கி அவர் கண்களால் கண்டு வருத்த முற்ற பிற்படுத்தபட்டவர்களின் நிலையை சுருக்கமாக விளக்கினார். சாசுவதி என்ற இளம் பெண் 5 வயதில் அமெரிக்கா வந்து சேர்ந்து, கல்லூரி முடித்து திரும்பி மும்பை சென்று விளிம்பு நிலை மக்களின் வேதனை நிலையைப் பார்த்து வந்து அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என மன உறுதி கொண்டார். இந்தியாவில் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் அமைப் புகளுடன் சேர்ந்து, முடிந்த உதவிகள் செய்து அவர்கள் நிலையை உயர்த்தலாம் என்று உணர்வு பொங்க விளக்கினார். ஒத்த கருத்துள்ள பலருடைய 10 ஆண்டு கள் கடும் உழைப்பினால் உருவானதுதான் இந்த விழா. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விழிப்பு நிலையை உண் டாக்குவதற்கு அமெரிக்காவில் உள்ள விளிம்பு நிலை மக்கள் அனைவரும் கல்வி மூலமாகவும் மனிதநேயம் வழியாகவும் முன்னேறியுள்ளோம். இந்தியாவில் உள்ளவர்க ளுக்கு உதவி செய்ய முன் வரவேண்டும் என்று வலியுறுத்தினார்.
மதியம் வால்டார்ப் என்ற ஊரில் நிகழ்ச்சி தொடர்ந்தது. திருமிகு ரமா துரைக் கண்ணன் மற்றும் அவர்கள் நண்பர்கள் பறை இசை நடனம் ஆடி மகிழ்வித்தனர். மராட்டிய கலை நிகழ்ச்சி களும் தொடர்ந்தன. இளம் தலைமுறையினர் அம்பேத்கரின் உழைப்பினை பெருமையுடனும் நன்றியுடனும் எடுத்து கூறினர்.
பெண்கள் கழுத்தில் தாலி என்ற வேலியே கிடையாது.
மராட்டிய குழந்தைகள் அசோகரின் தர்ம சக்கரம் உள்ள கொடியை ஆட்டி ஆடிப்பாடி மகிழ்வித்தனர். இம்மக்கள் சுதந்திரமாக ஜெய் பீம் ஜெய் பீம் என்று ஆடிப் பாடி மகிழ்வுடன்இருப்பதை இப் பொழுது அம்பேத்கர் பார்த்து இருந்தால் பெருமை பொங்க மகிழ்வார்.
அண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றை உருக்கமான நாடகமாக காண்பித்தனர். இந்த வாய்ப்பு கொடுத்த அமெரிக்காவிற்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.
இறுதியாக கொடைவள்ளல்கள் மற் றும் மேரிலாந்து செனட்டர் கிரிசு உலக ளாவிய அம்பேத்கர் அமைப்பிற்கு வாழ்த்துகளை வழங்கினர்.
பேராசிரியர் ரோசாசிங் “வாழ்க அம் பேத்கர் – வாழ்க பெரியார்” என்று தொடங் கிய இவர் டாக்டர் மார்ட்டின் லூதர்கிங் கனவையும் அம்பேத்கர் கனவையும் நினைவூட்டினார். நம்மை கேவலப்படுத்த எவரையும் அனுமதிக்க மாட்டோம் என்று உரக்கச் சொல்லி நரம்புகளைச்சுண்டி இழுத்தார். மனு ஸ்மிருதியை தோலுரித்துக் காட்டினார்.
மருத்துவர்கள் பெருங்கொடை வள்ளல்கள் தேவையா, ருத்ரம்மா தேவி பகிடிப்படி இணையர் அம்பேத்கர் பற்றி நன்றியுடனும் பெருமையுடனும் பேசி னார்கள். நிறைய மாணவர்களுக்கு கல் விக்கொடை அளித்துள்ளார். ஒரு பிள்ளை வெற்றியுடன் வெளிவந்தால் அந்தப் பிள்ளை இன்னொரு பிள்ளைக்கு கட்டாயம் உதவவேண்டும். அம்பேத்க ரினால் தான் நான் இந்த வெற்றியை அடைந்துள்ளேன். 20க்கு மேற்பட்ட ஒத்த கருத்துள்ள அமைப்புகள் வாழ்த்து களைப் பொழிந்தார்கள். பெரியார் பன் னாட்டமைப்பின் சார்பிலும், பெரியார் அம் பேத்கர் படிப்பு வட்டம் சார்பிலும் தமிழர் கள் கலந்து கொண்டோம்.
பெரியார், அம்பேத்கர் தமிழ்நாடு மற்றும் திராவிட மாடல் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் பற்றியும் பெரியார் பன்னாட்டு மாநாடுகள் பற்றியும், ஆசிரியர் வீரமணி அவர்களின் பணிகள் பற்றியும் சோம. இளங்கோவன் பேசினார்.
விழா மிகவும் சிறப்பாக நடந்தது.
தொகுப்பு: சரோ இளங்கோவன்