காரைக்குடி, அக். 15- கூட்டுறவுத்துறை அமைச் சர் கேஆர்.பெரியகருப்பன், கால்நடை பரா மரிப்புத்துறையின் சார்பில், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மித்ராவயல் கால்நடை கிளை நிலையத்தில் 8.10.2023 அன்று தரம் உயர்த்தப்பட்ட பார்வை கால் நடை மருந்தகத்தினை திறந்து வைத்து தெரி விக்கையில்,
கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் கள் மற்றும் கால்நடை மருந்தகங்கள் கால் நடைகளுக்கான காப்பீடுகள் உள்ளிட்ட திட் டங்களின் மூலம் கால்நடைகளை பேணிப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில், பல்வேறு வங்கி கடனுதவிகளும் வழங்கப்பட்டு வரு கிறது. அதில் நடப்பாண்டில் கூட்டுறவுத் துறையின் சார்பில் 1,04,000 கோடி ரூபாய் வழங்கிட இலக்கு நிர்ணயித்துள்ளார்கள். அதில், விவசாய கடன் மற்றும் பயிர் கடனு தவிகளுக்கு மட்டும் 17,000 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படவுள்ளது. அதேபோன்று கால் நடை வளர்ப்போர்களுக்கு பயனுள்ள வகை யில் ரூ.14,000/-வட்டியில்லா கடனுதவியா கவும் வழங்கப்படுகிறது. இத்திட்டங்களை விவசாயிகள் முறையாக அறிந்து கொள்வ தற்கென கிராமப்புறப்பகுதிகளில் விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டும் வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் கால்நடை களுக்கான 2 மருத்துவமனைகள் சிவகங்கை மற்றும் திருப்பத்தூர் பகுதியில் செயல்பட்டு வருகிறது.
மேலும், 79 கால்நடை மருந்தகங்களும், 47 கிளை கால்நடை மருந்தகங்களும் செயல் பட்டு வருகின்றன. அதனைத்தொடர்ந்து, இன்றைய தினம் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மித்ராவயல் கால்நடை கிளை நிலையத்தில் தரம் உயர்த்தப்பட்ட பார்வை கால்நடை மருந்தகமும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு முழுவதும் 245 நடமாடும் கால்நடை மருந் தகமும் நடப்பாண்டில் செயல்படுத்தப்படவுள் ளது என அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் சோ.பால்துரை, சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் திருமதி சரண்யா, கால்நடைப் பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்கு நர் (பொ) மரு.ஆர்.கார்த்திகேயன் உதவி இயக்குநர் (காரைக்குடி) மரு.எஸ்.எம்.பாலசுப் பிரமணி, முன்னாள் அமைச்சர் தென்னவன், ஆவின் பால்வளத்தலைவர் சேங்கைமாறன், மித்ராவயல் ஊராட்சி மன்றத்தலைவர் திரு மதி பி.அய்ஸ்வர்யா, காரைக்குடி வட்டாட்சி யர் பி.தங்கமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.