முதலீடுகள்
குறு, சிறு, தொழில் துறையில் தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் ரூ.63,000 கோடி புதிய முதலீடுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளோம். 5.5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று இத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு
நெய்வேலியில் என்.எல்.சி. சுரங்கப் பணிக்காக வீடு நிலம் கொடுத்தவர்களின் குடும்பத்தினரில் 229 பேருக்கு என்எல்சி நிர்வாகம் நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கி உள்ளது.
பரிந்துரை
தமிழ்நாட்டிற்கு காவிரியில் பிப்ரவரி மாதத்திற்குள் 4 டிஎம்சி நீரை திறந்து விடுமாறு கருநாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிதுரை செய்து உள்ளது.
ஆதாரம்
பிறந்த தேதிக்கான ஆதாரமாக ஆதார் அட்டை இனி ஏற்றுக் கொள்ளப் படாது என பணியாளர் வருங்கால வைப்பு நிதியம் (இபிஎஃப்ஓ) தெரிவித்து உள்ளது.
கரோனா
தமிழ்நாட்டில் நேற்று 151 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த வகையில், சென்னை, செங்கல் பட்டு, கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், திரு வள்ளூர், வேலூர் ஆகிய மாவட்டங் களின் தலா ஒருவருக்கு என தமிழ் நாட்டில் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அழைப்பு
ஊழலின் தீமைகளை பற்றி விளக்க வும், அதை ஒடுக்குவதற்கான சட்டரீதி யான வழிமுறைகளை அறிந்து கொள்ள செய்யவும் பயிற்சியாளர்களுக்கு ‘லோக பாக்’ அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
மீனவர்களுக்கு…
பேரிடர் காலங்களில் கடலில் சிக்கித் தவிக்கும் மீனவர்களுக்கு எச்சரிக்கை செய்தியை அனுப்பும் மய்யம் பெங் களூருவில் திறக்கப்பட்டுள்ளது என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்.