19.1.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
♦ மக்களிடையே வெறுப்பை பரப்புதல், அவர்களின் பணத்தை கொள்ளையடித்தல் ஆகியவற்றின் மூலம் நாட்டின் ஊழல் மிகுந்த மாநிலமாக பாஜ ஆளும் அசாம் இருப்பதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
டெக்கான் கிரானிக்கல் சென்னை:
♦ ஜனநாயகத்தின் அடர்ந்த இருண்ட காலத்திலிருந்து இந்தியாவை மீட்டெடுத்து, மீண்டும் ஒரு விடுதலை வெளிச்சம் நிறைந்த காலத்தினை மக்கள் காண்பதற்கு இந்தியா கூட்டணியின் முன்னெடுப்புகள் தொடங்கியுள் ளன. மாநிலங்களுக்கு எதிராக மலிவான-தரம் தாழ்ந்த அரசியல் அவலம் உயர்ந்த பொறுப்புக்கு சிறிதும் தகுதி யில்லாத ஆளுநர்கள்: ஜனநாயக வழியில் முறியடிப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦ அரசு மற்றும் பல்கலைக்கழக சிண்டிகேட் அனுமதி பெறுவதற்கு முன்பே தனியார்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளத் தூண்டியது என்ன காரணம் என பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.ஜெகநாதனிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.
தி இந்து:
♦ 2024-2023 வரையிலான ஒன்பது ஆண்டுகளில் இந்தியாவில் 24.82 கோடி மக்கள் “பல்பரிமாண வறுமையிலிருந்து” வெளியேறிவிட்டனர் என்று கூறும் நிட்டி ஆயோக் அறிக்கையின் நம்பகத்தன்மை குறித்து காங்கிரஸ் அன்று கேள்வி எழுப்பியது. கடந்த நிதியாண்டில் 7.1% ஆக இருந்த நுகர்வு வளர்ச்சி இந்த நிதியாண்டில் 4.4% ஆக குறைந்துள்ளது. 80 கோடி குடிமக்களுக்கு வழங்கப்படும் இலவச ரேஷன் நலன்களை குறைப்பதை இலக்காகக் கொண்டு இந்த அறிக்கை உள்ளது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
♦ 2014இல் ஆட்சிக்கு வந்த உடனேயே, நரேந்திர மோடி அரசு, மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை கணிச மாகக் குறைக்க முயன்றதாக
♦ நிட்டி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி. ஆர். சுப்ரமணியத்தின் கருத்துக்கு, மோடி அரசு “அனைத் தையும் ஒன்றியமயமாக்கல், முழுமையான கட்டுப்பாடு மற்றும் இந்தியாவின் கூட்டாட்சியை சிதைக்கிறது” என்று காங்கிரஸ் கண்டனம்.
தி டெலிகிராப்:
♦ பெங்களூர் இந்திய மேலாண்மைக் கழக ஆசிரியர் பதவிகளில் எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவினர் புறக்கணிப்பு – தவறான காரணங்களைக் கூறி தங்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக விண்ணப்பித்த இருவர் புகார்.
– குடந்தை கருணா