கும்முடிபூண்டி, அக். 15- கும்முடிபூண்டி கழக மாவட்டம் பொன்னேரி சங்கரபாண்டியன் திருமண மண்டபத்தில் 15-10-2023 காலை 10 மணி அளவில் திராவிடர் கழகம் நடத்தும் பெரி யாரியல் பயிற்சி பட்டறை 81 மாணவர்களுடன் தொடங்கியது.
பொன்னேரி நகர செயலாளர் மு.சுதாகர் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார் மாவட்ட செயலாளர் ஜே. பாஸ்கரன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ சுரேஷ் பகுத்தறிவாக் கழக பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், மாவட்ட இளைஞரணி தலைவர் சக்கரவர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் ராஜசேகர், பொன்னேரி நகர தலைவர் அருள், மேனாள் மாவட்ட தலைவர் உதயகுமார், மாவட்ட மகளிர் அணி தலைவர் இராணி ,மாவட்ட மகளிர் பாசறை தலைவர் செல்வி, மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் ஜெயராணி துரை. முத்துகிருஷ்ணன், மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினார்கள்.
மாவட்டத் தலைவர் ஆனந்தன் நிகழ்விற்கு தலைமையேற்று உரையாற்றினார்.
தலைமை கழக அமைப்பாளர் வி பன்னீர்செல்வம் பயிற்சிப் பட்டறையை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர் இரா. ஜெயக்குமார் நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தினார்.
பெரியார் ஒரு அறிமுகம் என்ற தலைப்பில் பகுத்தறிவாளர் கழக ஊடகப்பிரிவு மாநில தலைவர் மா.அழகிரிசாமி முதல் வகுப்பை நடத்தினார்.
நிகழ்வில் இருபால் மாணவர்கள் பெருமளவில் பங்கேற்று சிறப்பித்தனர்.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன் ,தொழிலாளர் அணி அசோகன், சுதன்ராஜ், எழில், புழல் ஜனாதி பதி எல்லாபுரம் அருணகிரி வடகரை உதயகுமார் உள்ளிட்ட கழகத் தோழர்கள் கழகப் பொறுப்பாளர்கள் இணைந்து ஏற் பாடுகளை செய்தனர்.