சென்னை, ஜன.19 தமிழ் நாட்டில் 5 மாவட்டங்களில் 400 பேரிடம் பரி சோதனை செய்த தில், 40 சதவீதத்தின ருக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு பொது சுகா தாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறிய தாவது:
சென்னை, திருச்சி, திருவண்ணாமலை, கன் னியாகுமரி, தருமபுரி மாவட்டங்களில் 400-க்கும் மேற்பட்டவர்களின் ரத்த சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த அளவை பரிசோதனை செய்ததில் அதில், 40 சதவீதம் பேருக்கு புதிதாக சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள், தங்களுக்கு அத்தகைய பாதிப்பு இருப்பதை அறியாமல் இருப்பதையே இந்த ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.
அறிகுறிகள் ஏதும் இல்லாமல் உள்ள சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தத்தை முறையாகக் கவனிக்காவிட்டால் அது உடல் உறுப்புகளை பாதிப்பதுடன் உயிருக்கே ஆபத்தாக முடியக்கூடும். 30 வயதுக்கு மேற்பட்ட வர்கள் அனைவரும் ஆண்டுக்கு ஒருமுறை ரத்த சர்க்கரை அளவையும், உயர் ரத்த அழுத்தத்தையும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனை களிலும் பரிசோதனைகள் கட்டணமின்றி செய்யப்படு கின்றன. அதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் 40 சதவீதத்தினருக்கு சர்க்கரை நோய்
Leave a Comment