திருவாளர் ‘துக்ளக்’ குருமூர்த்தியாக இருந்தாலும் சரி, பி.ஜே.பி. மாநிலத் துணைத் தலைவர் திருப்பதி நாராயணனாக இருந்தாலும் சரி, ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால், அது உண்மையாகி விடும் என்ற கோயபல்சின் வாரிசுகள்!
‘‘திருக்குறள் தங்கத் தட்டில் வைக்கப்பட்ட மலம்” என்று தந்தை பெரியார் சொன்னதாகச் சொல்லி வருகிறார்கள். இன்றைய ‘தினமலரில்’கூட திருவாளர் திருப்பதி நாராயணன் திருவாய் மலர்ந்துள்ளார்.
‘தினமலரும்’ சபாஷ் போட்டுள்ளது.
இவர்களுக்கு அறிவு நாணயம் இருந்தால், தந்தை பெரியார் அப்படி எங்கே சொன்னார்?
எப்பொழுது சொன்னார்?
ஆதாரம் என்ன?
என்று சவால் விட்டுக் கேட்கிறோம்.
கூற முடியவில்லை என்றால், குப்புற விழுந்து மன்னிப்புக் கேட்பதுதான் உத்தமம்!
அறிவு நாணயமிருந்தால் நிரூபிக்கட்டும்!
Leave a Comment