புத்துயிர் ஊட்டுகின்றீர்களா?
* ராமரை வைத்துப் பா.ஜ.க.வை அரசியல் செய்யவிடக் கூடாது – கி.வீரமணி பஞ்ச். அதுதானே ராமரை வைத்து நீங்கள்தானே அரசியல் செய்வீங்க.
– ‘இந்து தமிழ்திசை’ கேலி
>> கற்பனைக் கடவுள்களை வைத்து அரசியல் செய்தால் அதை விமர்சிப்பது அரசியலா? அதுதான் அரசியல் என்றால், அதை செய்வதுதான் வீரமணி யின் பணி. ஆமாம், ராமன்தான் சிராயு நதியில் விழுந்து தற்கொலை செய்துகொண்டானே, அதற்குப் புத்துயிர் ஊட்டுகின்றீர்களா?
மறுநாள் திறக்கப்படும்!
* ராமன் கோவில் திறப்பன்று மதுபானக் கடைகள் மூடப்படும்.
>> மறுநாள் திறக்கப்படும்!
பட்டியலில் இல்லாதவர்!
* ராமன் கோவில் திறப்பு விழாவிற்கு காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரசுவதி பங்கேற்பு.
>> இவர்தான் சங்கராச்சாரியார் பட்டியலிலேயே இடம்பெறாதவர் ஆயிற்றே; காஞ்சி மடம் என்ற ஒன்றே கிடையாதே! இவர் அயோத்திக்குப் போனால் என்ன? போகாவிட்டால்தான் என்ன?
இதுவும் ‘ஜூம்லா’தானோ!
* கடந்த 9 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்பு.
– பிரதமர் நரேந்திர மோடி
>> இதுவும் ‘ஜூம்லா’தானோ!
இப்பொழுது புரிகிறதா?
* பிரதமர் மோடி தமிழ்நாட்டில் சிறீரங்கம், ராமேசுவரம், தனுஷ்கோடியில் கோவில் தரிசனம்.
>> சங் பரிவார்கள் காவி உடை அணிவது ஏன் என்பது இப்பொழுது புரிகிறதா?
செய்தியும், சிந்தனையும்….!
Leave a Comment