சென்னை, ஜன.18- மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முதன்மை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான C-DAC தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் மற்றும் தொடர்புடைய பிற பிரிவுகளில் ஆராய்ச்சி மற்றும் முன்னணி பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் மின்னணுவியல் உற்பத்தி சேவைகள் (EMS) தொழில்துறையில் ஒரு முன்னணி நிறுவனமான அவலான்(Avalon) டெக்னாஜிஸ் நிறுவனம், C-Dac -இன் ஒரு உற்பத்தி செயல்பாட்டுக்கான ஒரு முக்கிய பார்ட்னராக ஆகியிருக்கிறது.
இதன்மூலம் இந்தியாவில் சூப்பர் கம்ப்யூட்டர்களை வடிவமைத்து தயாரிப்பதை குறிக்கோளாகக் கொண்டிருக்கும் ‘ருத்ரா’ செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக உயர் செயல்திறன் மிக்க கம்ப்யூட்டிங் – கணினி (HPC) அமைப்புகளை உள்நாட்டிலேயே சொந்தமாகத் தயாரிக்கும் திறனை இது சிறப்பாக மேம்படுத்தும் என அவலான் நிறுவன தலைவர் குன்கமெத் பிச்சா மற்றும் சி-டக்-இன் தலைமை இயக்குநர் இ.மகேஷ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.