மனிதனின் பிறப்பு கடவுளால், இறப்பு கடவுளால் என்கிறார்களா – இல்லையா? இவ்விரண்டுக்கும் காரணமாய்க் காணப்படுவது மனிதன் நடப்பாய் இருப்பதால் அந்த நடப்பும் கடவுளால்தான் நடை பெறுகின்றது என்றுதானே சொல்லுகிறார்கள். மனிதனுடைய நடப்போ பெரிதும் (நான் மேலே சொல்லியது போலவேதான்) கவலையும், கொடு மையும் நிறைந்ததாய் இருந்து வருகின்றது. இப்படிப்பட்ட நடப்புக்குக் கடவுளைக் காரண மாக்குகின்றவர்கள் கடவுளை மேன்மைப்படுத்தி னவர்களா? அல்லது கீழ்மைப்படுத்தினவர்களா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’