தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 13.1.2024 அன்று தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2024ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருதை தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிக்கும், 2023ஆம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருதை பத்தமடை பரமசிவத்திற்கும், பெருந்தலைவர் காமராசர் விருதை உ. பலராமனுக்கும், மகாகவி பாரதியார் விருதை கவிஞர் பழநிபாரதிக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருதை எழுச்சிக் கவிஞர் ம. முத்தரசுவுக்கும், தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருதை பேராசிரியர் எஸ். ஜெயசீல ஸ்டீபனுக்கும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருதை முனைவர் இரா. கருணாநிதிக்கும், 2023ஆம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருதை தமிழ்நாடு அரசின் சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் சுப.வீரபாண்டியனுக்கும், டாக்டர் அம்பேத்கர் விருதை பி. சண்முகத்திற்கும் வழங்கி, சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மருத்துவர் இரா. செல்வராஜ், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள் ஆகியோர் கலந்து கொண்டனர்.