அப்பியம்பேட்டை, டிச. 17- கடலூர் மாவட் டம் அப்பியம்பேட்டை யில் கழக இளைஞர் அணி சார்பில் 15.1.2024 அன்று காலை 9 மணி அளவில் உதயசங்கர் தோட்டத்தில் தமிழர் திருநாள் தமிழ் புத்தாண்டு விழா நடைபெற்றது.
கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் கலந்து கொண்டு பொங்கல் விழா வின் சிறப்பு, திராவிடர் கழகத்தின் தொண்டு, தந்தை பெரியாரின் ஈகம், தமிழர் தலைவரின் பெரியார் கொள்கை உலகமயப்படுத்தும் செயல்பாடு பற்றி எல்லாம் விளக்கி சிறப்புரை ஆற்றினார்.
மாவட்ட இளைஞர் அணி தலைவர் உதயசங்கர், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வேலு, மாவட்ட கழக இணைச் செயலாளர் பஞ்சமூர்த்தி, பெரியார் வீர விளையாட்டு கழக மாவட்ட தலைவர் மாணிக்கவேல், கட்டியங்குப்பம் சேகர், ஒன்றிய செயலாளர் செந்தில் வேல், மகளிர் அணி மாவட்ட பொறுப்பாளர்கள் குணசுந்தரி, சத்தியா, வழக்குரைஞர் வான்மதி, மலர், மங்கலட்சுமி, தேன்மொழி, வெண்மணி, தெற்கு சேப்ளாநத்தம் வரதராஜன் ஆகி யோர் நிகழ்வில் பங்கேற்று சிறப்பித் தனர்.
சமத்துவ பொங்கல் வைக்கப் பட்டு நிகழ்வில் பங்கேற்ற அனை வருக்கும் பொங்கல் வழங்கப்பட் டது. பொங்கலோ பொங்கல், தமி ழர் பொங்கல், திராவிடர் பொங் கல், திராவிட மாடல் பொங்கல் என்பன போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
முடிவில் வேணு கோபால் நன்றி கூறினார்.