இஸ்ரேலில் இருந்து இதுவரை மீட்கப்பட்ட தமிழர்கள் 110 பேர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

2 Min Read

அரசு, தமிழ்நாடு

மீனம்பாக்கம், அக்.16- இஸ்ரேலில் இருந்து இதுவரை 110 தமிழர்கள் மீட்கப்பட்டு அழைத்து வரப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த 7ஆம் தேதி முதல் நடக்கும் போர் தீவிரம டைந்து வருகிறது. இதனால் இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள், ஒன்றிய அரசின் ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானத்தில் இந்தியாவுக்கு அழைத்து வரப்படு கின்றனர்.

கடந்த 2 நாட்களாக 49 தமிழர் கள் மீட்கப்பட்டு தமிழ்நாடு அழைத்து வரப்பட்டனர். 12 பேர் அவர்களது சொந்த செலவில் நேரடியாக வந்துள்ளனர்.

அதன்தொடர்ச்சியாக நேற்றும் (15.10.2023) இஸ்ரேலில் இருந்து சிறப்பு விமானத்தில் இந்தி யர்கள் நாடு திரும்பினர். அதில் தமிழ்நாட்டை சேர்ந்த 49 பேர் வந்தனர்.

அவர்களில் 32 பேர் பல்வேறு விமானங்களில் டில்லியில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கும், 9 பேர் கோவை விமான நிலையத் துக்கும், 8 பேர் மதுரை விமான நிலையத்துக்கும் வந்தடைந்தனர்.

சென்னை விமான நிலையம் வந்தடைந்த 32 தமிழர்களையும் தமிழ்நாடு அரசின் சார்பில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வடசென்னை தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, அயலக தமிழர் நலத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

பா.ஜ.க. சார்பில் மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் தலைமை யில் பா.ஜ.க. நிர்வாகிகளும் வரவேற்றனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிர மணியன் கூறியதாவது:-

இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாக தமிழ்நாடு அரசு சார் பில் அறிவிக்கப்பட்ட உதவி எண் கள் மூலம் இஸ்ரேலில் சிக்கித் தவித்த 128 தமிழர்களின் விவரங் கள் கிடைத்தது. ஒன்றிய அரசின் ஆபரேன் அஜய் திட்டம் மூலம் விமானங்களை அனுப்பி இந்தியர் களை மீட்டு வரும் பணி நடந்து வருகிறது.

தமிழ்நாடு அயலக தமிழர் நலத் துறை மூலம் தினமும் இஸ்ரேலில் உள்ளவர்களிடம் பேசப்பட்டு வருகிறது. டில்லிக்கு அழைத்து வரப்படும் தமிழர்கள், அதிகாரிகள் உதவியுடன் தமிழ்நாட்டுக்கு வரு கின்றனர். அவர்கள் சென்னை, கோவை, மதுரை விமான நிலையங் களுக்கு அனுப்பி வைக்கப்படு கின்றனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 128 பேரில் இதுவரை 110 பேர் தமிழ்நாடு வந்து உள்ளனர். மீதி 18 பேர் தாயகம் வரவேண்டியது உள்ளது. மீட்கப்பட்டு வருபவர் கள், அவர்களது சொந்த ஊருக்கு அரசு செலவில் அனுப்பி வைக்கப் படுகிறார்கள். மதுரை, கோவை வருபவர்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வரவேற்று தேவை யான உதவிகளை செய்து வருகின் றனர். இந்தியர்களோ, தமிழர் களோ யாரும் பாதிப்புக்குள்ளாக வில்லை.

95 சதவீதம் பேர் உயர் படிப் பிற்காக இஸ்ரேல் சென்று உள் ளனர். ஒரு சிலர் வேலை சம்பந்தமா கவும், படிக்கும் உறவினர்களை காணவும் சென்று உள்ளனர்.

உலகம் முழுவதும் உள்ள நாடு களில் தமிழர்கள் வேலை வாய்ப்புக் காகவும், படிப்பதற்காகவும் சென்று இருக்கிறார்கள். உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் வசிக்கும் தமிழர் களின் விவரங்களை சேமிக்க விரை வில் இணையதளம் தொடங்கப் படும். 

இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *