சென்னை,ஜன.14- உத்தரப்பிர தேச மாநிலம் அயோத்தியில் கட் டப்பட்டுள்ள ராமன் கோவிலின் குடமுழுக்கு விழா வருகிற 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அர சியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங் கும் நிலையில் ராமன் கோவில் திறப்பு விழாவை தேர்தல் யுக்தியாக பா.ஜ.க. அரசு பயன்படுத்தி வரு கிறது. இதனால் ராமன் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க முடி யாது என பெரும்பாலான எதிர்க் கட்சிகள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், பாஜகவின் அரசியல் ஆதாயத்திற்காகவா ராமன் கோவில் திறக்கப்படுகிறது? பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-
“தர்மசாஸ்திர விதிகளின் அடிப் படையிலோ, பக்தர்களின் நலன்கள் அடிப்படையிலோ, ராமன் கோவில் திறக்கப்படவில்லை என்றால் பா.ஜ.க.-வின் அரசியல் ஆதாயத் திற்காகவா இப்போது ராமன் கோவில் திறக்கப்படுகிறது? என்ற கேள்விக்கு பிரதமர் மோடி பதில் சொல்லவேண்டும்.
“ராமனைப் பற்றி நமக்குச் சொல்லிக் கொடுத்தவை தர்மசாஸ் திரங்களே. அந்த தர்மசாஸ்திரங் களின் விதிகளின் அடிப்படை யிலும் ராமன் கோவில் திறக்கப் படவில்லை, பக்தர்களுக்கு நலன் தரும் வகையில் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்ட நிலையிலும் ராமன் கோவில் திறக்கப்பட வில்லை. இதனைப் பற்றிக் கேட் டால் மோடி ஆதரவாளர்கள் எங்களை எதிரிகளாகப் பார்க்கின் றனர்” என இந்தியாவின் மிக முக்கிய நான்கு சங்கராச்சாரியார்க ளும் கூறியுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.