ரயில் ஓட்டுநர்கள் 12 மணி நேரத்துக்கு மேல் பணியாற்றக் கூடாது: ரயில்வே வாரியம்

2 Min Read

அரசியல்

புதுடில்லி,அக்.16 ரயில் ஓட்டு நர்கள் 12 மணி நேரத்துக்கு மேல் பணியாற்றக் கூடாது என்று ரயில்வே வாரியம் அறிவுறுத்தி யுள்ளது.

ரயில் ஓட்டுநர்கள், கார்டுகள் உள்ளிட்ட பணியாளர்களின் பணி நேரம் தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை, அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் அனுப்பியுள்ளது. ரயில்களின் இயக்கம் பாதுகாப்பாக இருப்பதை மேம்படுத்த பணி யாளர்களின் வேலை நேரம், அவர் களின் ஓய்வு நேரம் ஆகியவற்றை கவனித்துக்கொள்ளுமாறு ரயில்வே மண்டலங்களுக்கு நினை வுபடுத்தும் அந்த வழிகாட்டுதல்கள், ஏற்கெனவே வழங்கப்பட்ட பல் வேறு வழிகாட்டுதல்களின் தொகுப்பாக உள்ளது.

புதிய வழிகாட்டுதல்களில், ‘ரயில் ஓட்டுநர்களின் பணி நேரம் 9 மணி நேரத்தைத் தாண்டக் கூடாது. அதிகபட்சமாக 12 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்யக் கூடாது. நிலநடுக்கம் விபத்து, வெள்ளம் போன்ற அவசர சூழல் களில் கூடுதல் நேரம் பணியாற்ற நேரிடலாம் என்று அவர்களுக்கு ரயில் கட்டுப்பாட்டாளர் அறிவு றுத்த வேண்டும்’ என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

‘கூடுதல் நேரம் பணியாற்றிய தால் விபத்துகள்’:

புதிய வழிகாட்டுதல்களுக்கு இந்திய ரயில்வே ஓட்டுநர்கள் கூட்டமைப்பு (அய்ஆர்எல்ஆர்ஓ) அதிருப்தி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்தக் கூட்டமைப் பின் செயல் தலைவர் சஞ்சய் பாந்தி கூறுகையில், ‘அவசர சூழல்கள் என்ற போர்வையில் 15 மணி நேரம் அல்லது அதற்கும் அதிகமான நேரம் பணியாற்றுமாறு ரயில் ஓட்டுநர்களிடம் கேட்கப்படுகிறது.

ஓட்டுநரை பணியில் இருந்து விடுவிப்பது எப்படி, அவரைப் பணியிலிருந்து விடுவிக்கும் இறுதி அதிகாரம் எவருக்கு உள்ளது ஆகியவை தொடர்பாக உரிய வழிகாட்டுதல்கள் இல்லை.

ஓட்டுநர்கள் தங்கள் பணி நேரம் முடிந்த பிறகும் கூடுதல் நேரம் வேலை செய்ததால்தான் கடந்த காலங்களில் பல விபத்துகள் நேர்ந்தன.

ரயில் ஓட்டிக்கொண்டு உணவு சாப்பிட்ட ஓட்டுநர்கள் தவறு இழைத்ததாக அவர்கள் மீது சம்பந் தப்பட்ட அதிகாரிகள் குற்றஞ்சாட்டிய நிகழ்வுகள் நேர்ந்துள் ளன. இந்நிலையில், புதிய வழி காட்டுதல்களில் 12 மணி நேர வேலை நேரத்தில் ஓட்டுநருக்கான உணவு இடைவேளை தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை’ என்று தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *