தமிழ்நாடு அரசின் 2024ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது பெற்ற திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் இன்று (14.1.2024) காலை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் விருதைக் காண்பித்து வாழ்த்துப் பெற்றார். பேராசிரியர் சுப. வீரபாண்டியனுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் மற்றும் பலர் உள்ளனர். (சென்னை பெரியார் திடல் – 14.1.2024)