கடலோரப் பகுதிகளையும் உயிரினங்களையும் பாதுகாக்க ரூபாய் 1,675 கோடியில் திட்டம் தமிழ்நாடு அரசு ஆணை வெளியீடு

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை. ஜன. 13- எதிர் காலத்தில் கடலோரப் பகுதிகளையும் உயிரினங் களையும் பாதுகாக்கும் வகையில் ரூ.1,675 கோடி செலவில் தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்க திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு அர சாணை வெளியிட்டு உள்ளது.
இதுகுறித்து சுற்றுச் சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வன செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்ட அரசாணையில் கூறப் பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டமன் றத்தில் 2023-2024ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தபோது சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான அறிவிப்பை நிதித்துறை அமைச்சர் வெளியிட் டார். அதில், பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தா லும், மக்கள்தொகை பெருக்கத்தாலும் கடலோர சுற்றுச்சூழலும் கடலோர மக்களின் வாழ்வாதாரமும் வரும் காலத்தில் கடுமையாக பாதிக்கப்படக் கூடும்.
கடல் அரிப்பைத் தடுக்கவும், கடல் மாசு பாட்டை குறைக்கவும், கடல் உயிரியல் பன்முகத் தன்மையை பாதுகாக்க வும், தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் என்ற திட்டத்தை ரூ.2ஆயிரம் கோடி மதிப்பீட்டில் உலக வங்கி நிதியுடன் அடுத்த 5ஆண்டுகளில் இந்த அரசு செயல்படுத்த உள்ளது என்று குறிப் பிடப்பட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து உலக வங்கியின் உதவி கோரப்பட்டது. உலக வங்கி கேட்டபடி, திட்ட தொடக்க அறிக்கையை அரசு அளித்தது. அதைத் தொடர்ந்து திட்ட முன் மொழிவுக்கான அங்கீகா ரத்தை உலகவங்கி அளித் துள்ளது.
இந்தத் திட்டம் 5 பிரிவுகளாக பிரிக்கப் பட்டுள்ளது. கடலோர பல்லுயிர் பாதுகாப்பை மேம்படுத்துதல், கடலோ ரத்தை பாதுகாத்தல், வாழ்வாதாரத்தை மேம் படுத்துதல், மாசுபடுதலை தணித்தல், திட்ட மேலாண்மை ஆகிய பிரிவுகளை உள்ளடக்கி உள்ளது.
கடலோர பல்லுயிர் பாதுகாப்பை மேம்படுத் துதல் பிரிவின் கீழ், செங் கல்பட்டு மாவட்டம் கடம்பூரில் பல்லுயிர் பாதுகாப்பு பூங்கா அமைத்தல்; நாகை மற்றும் சென்னையில் கடல் ஆமைகள் பாது காப்பு மய்யம் அமைத்தல்: கடல்வாழ் பாலூட்டிகள் பாதுகாப்பு மய்யத்தை தஞ்சாவூர் மாவட்டம் மனோராவில் அமைத் தல்; பள்ளிக்கரணை உள் ளிட்ட கடலோர சதுப்பு நிலங்களை மீட்டெடுத் தல் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
இந்த 5 பிரிவின்கீழ் வரும் திட்டங்களை செயல்படுத்த ரூ.1.675 கோடி தொகை செலவா கிறது. இந்தத்தொகையில் ரூ.1,172.50 கோடியை உலக வங்கியும், ரூ.502.50 கோடியை தமிழ்நாடு அரசும் பங்களிக்கும். திட்ட காலமான 2024–2029ஆம் ஆண்டுகளில் திட்டத் தொகை 5 ஆண்டு வாரியாக பிரித்தளிக்கப் படும். -இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *