* மொழியின் தத்துவத்தைப் பற்றிச் சிந்தித்தால் மொழி எதற்காக வேண்டும்? ஒரு மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்க மொழி வேண்டும். அதற்கு அந்தந்த நாட்டிலிருப்பவன் அந்த அந்த நாட்டின் மொழியைக் கொண்டு அந்த நாட்டு மக்களுக்குத் தன் கருத்தைத் தெரிவிக்கிறான். இதைத் தவிர வேறு எந்தக் காரணத்துக்காவது மொழி வேண்டுமென்றால் அந்தக் காரணத்துக்குப் பயன்படும்படியான மொழிதான் நமக்கு வேண்டும்.
* உலக நிலைக்கு உதவும் மக்கள் என்ன நிலையில் இருக்கின்றோம் என்றால் இழிமக்களாக – சூத்திரர்களாகப் பஞ்சமர்களாக நம் தாய்மார்கள் எல்லாம் சூத்திரச்சிகளாக, அடிமைகளாக வாழ்கின்றோம். நமக்குப் படிப்பு கிடையாது; பதவி கிடையாது; கோயிலில் சென்று உள்ளே வணங்க வகை கிடையாது. இந்த நிலையில்தான் பாட்டாளி மக்களாகிய நாம் – இந்த நாட்டின் பரம்பரை மக்களாகிய நாம் இருக்கின்றோம்.
தந்தை பெரியார் பொன்மொழிகள்
Leave a Comment