தைத் திங்கள் தமிழர் திருநாள் பொங்கல் சிறப்பிதழ்

1 Min Read

பொங்குக உள்ளமெல்லாம் – இல்லமெல்லாம்!
கவிஞர் கலி.பூங்குன்றன்

தை முதல் நாள் பொங்கலே
தமிழர் இல்ல மெல்லாம் பொங்குகவே!

தமிழர்க்குரிய புத்தாண்டு நீ
தை தை யென்று ஆடிநீ வருகவே!

சங்கராந்தி என்று சொல்லி – நம்
சரித்திரத்தை மாற்றுவார் தம்
சரிதத்தை முடித்து வைத்து
சர்க்கரைப் பொங்கலிடுவோம் வா!

உழுதுண்டு வாழும் உழைப்பாளர் நாம்
உழைப்பின் அறுவடையைத் துய்ப்போம் வா!

பயிரிடுதலைப் பாவமென்பவர்
பச்சரிசி பொங்கி கொழுத்திடுவார்!

பாட்டாளி மக்கள் உழைக்காமல்
பச்சரியும் கிடைத்திடுமோ சொல்!

எத்தனைக் காலம் ஏமாற்றுவார்
ஏறு தழுவிய வீரத் தமிழ்மண்ணில்!
ஈரோட்டுச் சூரியன் உதித்த பின்
எடுபடுமோ எத்தர்க் கூட்டத்தின் இருளும் தான்?

எங்கும் ஒலிக்கட்டும் பொங்கலோ பொங்கல்!
மழலைகளின் மத்தாப்புச் சிரிப்பும் கேட்கட்டும்

பண்பாட்டுப் படையெடுப்பின்
முதுகுத் தோலை உரித்திடுவோம்!

பத்தாம் பசலி பழைமைக் காட்டை
பகுத்தறிவுத் தீமூட்டி எரித்திடுவோம்!

நாம் திராவிடர் என்னும் – இன
நரம்புப் புடைத்துக் கொண்டாடுவோம்!

தை முதல் நாள் பொங்கலே
‘தை’, ‘தை’ யென்று ஆடிப்பாடி வருகவே!

அடுத்தாண்டு பொங்கல் பொன்னாளில்
ஆட்சி மாற்ற தேனாறு பெருகவே!

பொங்கலோ பொங்கல்!
புத்தாண்டு வாழ்த்துகள்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *