12.1.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
♦மத நம்பிக்கை தனி நபர் சார்ந்தது; விழாக்கள் அனைவருக்குமானவை என மம்தா கூறியதை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டிரெக் ஓ பிரைன் சுட்டிக்காட்டி பேச்சு.
♦ ஒரே நாடு, ஒரே தேர்தல், அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கட்டுமானத்திற்கு எதிரானது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா கடிதம்.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
♦ சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு ஆய்வு என்ற பெயரில் ஆளுநர் வருகை கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦ ஒரே நாடு, ஒரே தேர்தல், குடியரசுத் தலைவர் ஆட்சி முறையில் இந்தியாவை மாற்றும் தந்திரம் என மம்தா கண்டனம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦ குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும் அல்லது வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று பில்கிஸ் பானோ வழக்கில் நேரில் பார்த்த சாட்சி தெரிவித்துள்ளார்.
தி டெலிகிராப்:
♦ராமன் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள மறுத்த காங்கிரஸ் குறித்த பாஜகவின் கருத்திற்கு, ஆர்.எஸ்.எஸ். – பிஜேபி அமைத்த “விசுவாச தேர்வில்” தேர்ச்சி பெறுவது இப்போது ஹிந்துவாகக் கருதப்படுவதற்கு இன்றி யமையாத தகுதியாகிவிட்டதா? என காங்கிரஸ் பதிலடி.
♦ மோடி அரசின் ‘பேட்டி பச்சாவ்’ (குழந்தையைக் காப்பாற்றுவோம், கல்வி அளிப்போம்) லோகோவைப் பயன்படுத்துமாறு பல்கலைக் கழகங்களை பல்கலைக்கழக மானியக் குழுவின் கட்டளைக்கு, கல்வி நிறுவனங்களின் சுயாட்சியில் தலையிட தொடர் முயற்சிகள் நடந்து வருவ தாக டில்லி பல்கலைக்கழகத்தின் கல்வி கவுன்சில் உறுப் பினர் மாயா ஜான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
– குடந்தை கருணா