செந்துறை ஒன்றியம் – சேடக்குடிக்காடு கிராமம், மறைந்த இரத்தினம் அவர்களின் வாழ்விணையரும், அரியலூர் மாவட்ட தலைவர் விடு தலை நீலமேகன் அவர்களின் தாயாருமான ஜெயலட்சுமி நேற்று (11.1.2024) பிற்பகல் 1.30 மணியளவில் உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
அம்மையாரது உடல் சேடக்குடிக்காடு கிராமத்தி லுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு இறுதி நிகழ்வு இன்று (12.1.2024) பொதுச் செயலாளர் துரை.சந் திரசேகரன் தலைமையில், கழக ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், புலவர் வை. நாத்திக நம்பி, கழக அமைப்பாளர் க.சிந்தனைச்செல்வன், மாநில ப.க. அமைப்பாளர் தங்க . சிவமூர்த்தி, மாவட்ட செய லாளர் மு.கோபாலகிருஷ்ணன்,செந்துறை ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வராஜ், காப்பாளர் சு.மணி வண்ணன், பொதுக்குழு உறுப்பினர் சி.காமராஜ், மாவட்ட துணை செயலாளர் பொன்.செந்தில்குமார், மாவட்ட இணை செயலாளர் ரத்தின.ராமச்சந்திரன், மாவட்ட துணைத் தலைவர் இரா.திலீபன்,மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் தா.மதியழகன், செயலா ளர் வெ.இளவரசன், மாநில இளைஞரணி துணை செயலாளர் சு.அறிவன், இளைஞரணி தலைவர் க.கார்த்திக், ஒன்றியப் பொறுப்பாளர்கள் மு.முத்தமிழ் செல்வன், ராசா.செல்வக்குமார், மா. கருணாநிதி, துரை.பிரபாகரன், தெ.செந்தில் ரகுபதி, தோழர் கோரா, இரா.எ.இராமகிருட்டிணன், கோ.பாண்டியன், பேராசிரியர் அருள், தியாக.முருகன் சோ.க.சேகர், சி. தமிழ்சேகரன் உள்ளிட்ட ஏராளமான கழகப் பொறுப் பாளர்களும் உறவினர்களும் அனைத்துக் கட்சி பிர முகர்களும் பங்கேற்று இரங்கல் தெரிவித்தனர்.