அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை தமிழ்நாடு அரசு அறிவிப்பு

viduthalai
2 Min Read

சென்னை,ஜன.12- எதிர்வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு சுமார் 1,12,675 போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு ரூ.6.75 கோடி சாதனை ஊக்கத்தொகை அறிவித்துள்ளது
தமிழ்நாடு அரசு. இதுகுறித்து போக்குவரத் துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ள தாவது.
பொங்கல் நாளை முன்னிட்டு ஒரு இலட்சத்து பன்னிரெண்டாயிரத்து அறுநூற்று எழுபத்தைந்து போக்குவரத்துக் கழகப் பணி யாளர் களுக்கு ரூபாய் ஆறு கோடியே எழுபத்தைந்து இலட் சத்து எழுப் பத்து மூன்றாயிரம் சாதனை ஊக்கத்தொகை வழங்கப் படும். தமிழ் நாட்டில் சிறப்பான மற்றும் திறமையான போக்கு வரத்து சேவையை பொதுமக்க ளுக்கு அளிப்பதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.

இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் இயங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தான் பயணிகள் அடர்வு, பேருந்து பயன்பாடு, எரி பொருள் செயல் திறன் ஆகியவற்றில் உயர்ந்து விளங்குகின்றன.

குக்கிராமம் முதல் மாநகரங்கள் உட்பட மக்கள் குடியிருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் தங்கு தடையின்றி, போக்குவரத்து சேவை அளிக் கப்பட்டு வருகின் றது. தமிழ்நாடு அரசுப் போக்கு வரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறு வனம், பல்லவன் போக் குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகிய அனைத்து நிறுவனங்களிலும் தற்போது சுமார் ஒரு இலட்சம் பணி யாளர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள்.

பொங்கல் நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்கு வரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவு ரைப் பணிக் குழு ஆகியவற்றில் பணிபுரியும், பணி யாளர்களில், 2023-ஆம் ஆண்டில் 91 நாட்கள் மற்றும் அதற்கு மேலும், ஆனால் 151 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு 85 ரூபாய் வீதமும்; 151 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் ஆனால் 200 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு 195 ரூபாய் வீதமும், 200 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் பணி புரிந்த ஊழியர்களுக்கு 625 ரூபாய் வீதமும் பொங்கல் “சாதனை ஊக்கத் தொகை” வழங்கப்படும்.

இந்த உத்தரவின்படி, அனைத்து அரசுப் போக்குவரத் துக் கழகங்களில் பணிபுரியும் ஒரு இலட்சத்து பன்னி ரெண்டாயிரத்து அறுநூற்று எழுபத் தைந்து போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு ரூபாய் ஆறு கோடியே எழுபத்தைந்து இலட் சத்து எழுப்பத்து மூன்றாயிரம் சாதனை ஊக்கத்தொகை வழங்கப் படும் என அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *