சென்னை, ஜன.12 சாலை பாதுகாப்பு குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 3 நாள் ‘சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு’ நிகழ்ச்சி பிரசாந்த் மருத்துவமனை சார்பில் நடைபெற்றது.
இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதை பிரசாந்த் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் பிரசாந்த் கிருஷ்ணா மற்றும் இம்மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் பாஸ்கரன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த வாக்கத்தான் மூலம் மக்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது. இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் சுகாதார வல்லுநர்கள், மாணவர்கள் மற்றும் பிற சமூக உறுப் பினர்களை ஒன்றிணைத்து, பொறுப்பான முறையில் வாகனம் ஓட்டுவதை ஊக்குவிப்பதற்கும் கவனச் சிதறல்களைக் குறைப்பதற்குமான ஒரு முயற்சி என்று கூறியுள்ள இம்மருத்துவமனை இதன் மூலம் சாலை விபத்துகளை வெகுவாக குறைப்பதோடு, காயங்கள் மற்றும் உயிருக்கு ஆபத்தான நிலைமைகளைத் தடுப்பதே எங்களின் முக்கிய நோக்கமாகும் என்றும் கூறியுள்ளது.
பொது மக்களிடையே சாலை பாதுகாப்பு நடைப் பயண விழிப்புணர்வு
Leave a Comment