சென்னை, அக்.17- “தூத்துக்குடி அருகே குலசேகரப்பட்டினத்தில், இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக,அரசு 2000 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்துள்ளது. நிலம் முழுவதுமே கையகப்படுத்தியாகி விட்டது. அங்கிருந்து சிறிய வகை ராக்கெட்டுகளை ஏவுவது சிறந்த தாக இருக்கும்” என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத் தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, இஸ்ரோ தலை வர் சோம்நாத் நேற்று (16.10.2023) சந்தித்தார். பின்னர் செய்தியாளர் களைச் சந்தித்த அவர், “கன் னியாகுமரி மாவட்டம் நாகர் கோவில் அருகே உள்ள மகேந்திர கிரியில் இஸ்ரோவின் உந்துவிசை வளாகம் இயங்கி வருகிறது. அங்கிருந்துதான், ராக்கெட்டுக் கான உதிரி பாகங்களை இஸ்ரோ தயாரித்து வருகிறது. அதேபோல அங்கிருந்துதான் திரவ இன்ஜின் சோதனை உள்ளிட்ட சிக்கலான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிறகு அங்கிருந்துதான் சிறீஅரிகோட்டாவுக்கு வருகிறது. அவை பற்றி ஆலோசித்தேன். மேலும், இஸ்ரோவில் நடந்துவரும் பணிகள் குறித்து முதலமைச்சரிடம் கூறினேன். அவரும் அதுகுறித்து அறிந்துள்ளார். இஸ்ரோவின் முன்னெடுப்புகளுக்கு உதவுவதாக அவரும் கூறினார். நாட்டின் விண் வெளி சார்ந்த பணிகளுக்கு தமிழ் நாட்டின் பங்களிப்பு பெருமை யளிக்கிறது” என்றார்.
குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் குறித்த கேள்விக்கு பதில ளித்த அவர், “குலசேகரப்பட்டினத் தில் இரண்டாவது ராக்கெட் ஏவு தளம் அமைக்கப்பட்டு வருகிறது. சிறீஅரிகோட்டா ஏவுதளம் அமைக்கப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இந்த ஏவுதளம் அருகே இலங்கைத் தீவு இருப்பதால், அங்கிருந்து ஏவப்படும் அனைத்தும் அந்த தீவைச் சுற்றித்தான் செல்ல வேண்டியிருக்கிறது. அவ்வாறு சுற்றிச் செல்லும்போது, ராக்கெட் டின் பேலோட் திறன் குறைந்து விடுகிறது. இதனால், சிறிய வகை ராக்கெட்டுகளை அங்கிருந்து ஏவு வதற்கு சிரமமாக உள்ளது. எனவே சிறிய வகை ராக்கெட்டுகளை ஏவுவ தற்கு தென் பகுதிதான் சிறந்தது.
கன்னியாகுமரியிலிருந்து அவ் வகை ராக்கெட்டுகளை ஏவினால், அது சிறந்ததாக இருக்கும். கன்னி யாகுமரியில் அவ்வளவு பெரிய இடம் இல்லை. எனவே, தூத்துக்குடி அருகே குலசேகரப்பட்டினத்தில் அரசு 2000 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்துள்ளது. நிலம் முழுவதுமே கையகப்படுத்தியாகிவிட்டது. அங்கிருந்து சிறிய வகை ராக்கெட் டுகளை ஏவுவது சிறப்பானதாக இருக்கும்” என்றார்.
நிலவுக்கு மனிதரை அனுப்புவது தொடர்பான கேள்விக்கு பதில ளித்த அவர், “சந்திராயன்-3 தரையிறக்கப்பட்டுள்ளது. அந்த அனுப வத்தின் அடிப்படையில், அடுத் தடுத்த தரையிறக்கம் நடைபெறும். அங்கிருந்து மாதிரிகள் திரும்பி வருவதற்கான பணிகளை மேற் கொள்ள வேண்டும். ரோபாட் அங்கிருந்து திரும்பி பூமிக்கு வர வேண்டும். அதற்கான திட்டங்களை தயாரிக்க வேண்டும். இதற்காக பெரிய அளவிலான ராக்கெட்டை வடிவமைக்க வேண்டும்.
தற்போது இருக்கும் ராக்கெட்டைக் கொண்டு மனிதரை அங்கு கொண்டு செல்வதற்கான வசதிகள் இருக்காது. இதுவெறும் 4.5 டன் எடை கொண்டதுதான். மனிதர்களைக் கொண்டு செல்வது என்றால், 12.5 டன் எடை கொண்ட ராக்கெட்டாக இருக்க வேண்டும். அந்த ராக்கெட்டை தயாரிக்க வேண்டும். இவையெல்லாம் 10,12 ஆண்டுகளுக்குள் முடிந்துவிட் டால், மனிதர்களை அங்கு கொண்டு செல்லும் நிலையை எட்டிவிடலாம்” என்று அவர் கூறினார்.