நாகர்கோவில், நவ. 24- ஆவின் பால் குறித்த, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்கு, அவரின் பெயரைக் குறிப் பிடாமல், தமிழ்நாடு பால் வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
அதில், “அதானியை வளர்ப்பதற்கு பிரதமர் ஓடுவது போல, தமிழ் நாட்டில் உள்ள கார்ப்ப ரேட் நிறுவனங்களை வாழ வைப்பதற்காக சில கைக்கூலிகள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்” என சாடியுள்ளார். “அதி முக ஆட்சிக் காலத்தில், விவ சாயிகள் வழங்கும் பாலுக்கு தரத்திற்கு ஏற்ற விலையைக் கொடுக்க வில்லை. ஆனால், இப் போது 50% அதிகமாகக் கொடுக்கப்படுகிறது. பால் கொள்முதல் செய்த பின்னர் 10 நாட்களில் பணப் பட்டுவாடா செய்யப்படுகிறது.
இது ‘ரஃபேல் வாட்ச்’ கட்டிக்கொண்டு ஆடு மேய்க்கும் கதை பேசுபவர் களுக்குப் புரியாது; தெரியாது.
அதானி கும்பலை வாழவைக்க எப்படி ஒரு பிரதமர் ஓடுகிறாரோ அதனைப் போன்று இங்கு சில கார்ப்பரேட் களை வாழவைக்க சில கைக்கூலிகள் ஓடிக் கொண்டு இருக்கிறார் கள். தமிழ்நாட்டில் உள்ள நிறுவனத்தால் நேரடி யாக முதலில் பயன்பெறு கின்றவர்கள் கடைக் கோடி விவசாயிகள்.
இந்த விவசாயிகள் நலனுக்காகத் தொடங்கப் பட்ட ஆவின் நிறுவனத் தைத் தகர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒருவர் செயல்படுகிறார் என்றால் அவரை கைக் கூலி அல்லாமல் வேறு யாராக இருக்க முடியும்?. தமிழ்நாட்டில் ஆவின் அசைக்க முடி யாத நிறு வனமாக உள்ளது. இத னால் பால் உற்பத்தியா ளர்களுக்குக் குறைந்த பட்ச ஆதார விலை கிடைக்கிறது. வருடம் முழுவதும் விலை கிடைக் கிறது. வட இந்திய நிறு வனங்கள் தமிழ்நாட் டிற்குள் நுழைய முடிய வில்லை. இதனால் ஆவின் பெயரைக் கெடுக்க, நற் பெயருக்குக் களங்கம் விளைவிக்க முடியுமா என்று சிலர் பார்க்கி றார்கள்.
ஆவின் பால் பற்றி பரிசோதனை செய்தோம் அதுவும் ‘பெட்’ பாட்டி லில் என்று ஒருவர் சொல்கிறார். ஆவினுக்கு முதலில் ‘பெட்’ பாட் டிலே கிடையாது என்று கூட அவருக்குத் தெரிய வில்லை. அதனால் ஆவின் பால் குறித்த பொய் பிரச்சாரங்களைப் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்’’ என்று மனோ தங்க ராஜ் குறிப் பிட்டுள்ளார்.