பிஜேபியுடன் கூட்டணியா? கருநாடகாவில் உடைகிறது மதசார்பற்ற ஜனதா தளம்

2 Min Read

பெங்களூரு, அக்.18  மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் மேனாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

அக்கட்சியின் மாநில தலைவர் சி.எம்.இப்ரா ஹிம் போர்க்கொடி தூக்கியுள்ளதால் மஜத வுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் மேனாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார் பற்ற ஜனதா தளம் கட்சி கடந்தமாதம் இணைந்தது. இதுதொடர்பாக மேனாள் முதலமைச்சர் குமாரசாமி டில்லி சென்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந் திப்புக்கு பின்னர், மஜத வின் எதிர்க்கால நலனை கருத்தில் கொண்டு பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதாக தெரிவித்தார். இதனால் மஜதவில் இருக்கும் முஸ்லிம்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். மஜதவை சேர்ந்த மேனாள் அமைச் சர் என்.எம்.நபி, மாநில துணைத் தலைவர் சையத் சஃபிஃபுல்லா சையத், மேனாள் டில்லி பொறுப் பாளர் முகமது அல்தாஃப், முன்னாள் சிறுபான்மை பிரிவு தலைவர் நசீர் ஹுசைன், மேனாள் இளைஞர் அணி தலைவர் என்.எம். நூர் ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.

இந்நிலையில் மஜத மாநில தலைவரும் மேனாள் ஒன்றிய அமைச் சருமான சி.எம். இப்ரா ஹிம், ‘‘பாஜகவுடன் கூட் டணி வைத்தது தொடர் பாக எனக்கு தகவல் தெரிவிக்கப்பட வில்லை. குமாரசாமி இந்த விவ காரத்தில் திட்டமிட்டே என்னை புறக்கணித் துள் ளார். எனது தலைமையிலான மஜத பாஜகவுடன் கூட்டணி அமைக்க வில்லை. தேவகவுடாவும் குமாரசாமியும் பாஜக வுடன் கூட்டணி வைத்து கட்சியை பலி கொடுத்து விட்டனர். 

 எனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மஜத சட்டமன்ற உறுப் பினர்களுடன் ஆலோ சனை நடத்த இருக்கி றேன். இன்னும் ஓரிரு நாட்களில் எங்களது அடுத்த கட்ட நடவ டிக்கை குறித்து அறிவிக்க இருக்கிறேன்”என்றார். தேவகவுடா, குமார சாமிக்கு எதிராக சி.எம்.இப்ராஹிம் போர்க் கொடி தூக்கியுள்ளதால் மஜதவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் மஜத உடையும் நிலையில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *