ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் சாகித்ய அகாடமியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடம்: பப்ளிகேஷன் அசிஸ்டென்ட் 1, விற்பனை உதவியாளர் 2, தொழில்நுட்ப உதவியாளர் 1, பிழை திருத்துபவர் 1, டெலிபோன் ஆப்பரேட்டர் 1, ஜூனியர் கிளார்க் 2, எம்.டி.எஸ்., 2 என
மொத்தம் 10 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: எம்.டி.எஸ்., பணிக்கு பத்தாம் வகுப்பு, கிளார்க் பணிக்கு பிளஸ் 2, மற்ற பணிக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும்.
வயது: 4.2.2024 அடிப்படையில் விற்பனை உதவியாளர் 40, பப்ளிகேஷன் அசிஸ்டென்ட், தொழில்நுட்ப உதவியாளர் 35, மற்ற பணிகளுக்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி:Secretary, Sahitya Akademi, Rabindra Bhavan, 35 Ferozeshah Road, New Delhi-110001
கடைசி நாள்: 5.2.2024
விவரங்களுக்கு: sahitya-akademi.gov.in