திருச்சி, ஜன. 10- திருச்சி மாவட்டம், லால்குடி கழக மாவட்டம், கீழவா ளாடி கிளை திராவிடர் கழக செயல் வீரர் ப.மருதமுத்து (வயது 82) 04.01.2024 அன்று மாலை வயது முதிர்வின் காரணமாக இயற்கை எய்தினார்.
இவர்களுக்கு தங்க துரை, பரிமளா கண்ணன் ஆகிய இரண்டு மகன்க ளும், மஞ்சுளா என்ற மகளும் உள்ளனர்.
தோழரின் உடலுக்கு திராவிடர் கழகம், லால் குடி மாவட்டம் சார்பாக இறுதி மரியாதை செலுத்தி கழகக் கொடி போர்த்தி வீரவணக்கம் செலுத்தப் பட்டது. சு. பனிமலர் செல்வன் (இளைஞர் அணி செயலாளர், லால் குடி மாவட்டம்) தலை மையில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் திராவி டர் கழக பொது செயலா ளர் வீ.அன்புராஜ் அளித்த இரங்கல் செய்தி வாசிக் கப்பட்டது. ப.ஆல்பர்ட் (மாநில ஒருங்கிணைப் பாளர்), அங்கமுத்து (லால் குடி மாவட்ட செயலா ளர்), ப.இன்பராஜ் (லால் குடி இளைஞர் அணி, ஒன்றிய அமைப்பாளர்), பிச்சைமணி (லால்குடி ஒன்றிய தலைவர்), மூ.முத்துசாமி (மண்ணச்ச நல்லூர் நகர தலைவர்), பாலச்சந்திரன் (மண்ணச்சநல்லூர் நகர செயலாளர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மு.செல்வி, (பகுத்தறிவு ஆசிரியர் அணி) இரங்கல் உரை நிகழ்த்தினார்.
மேலும், வீ.அன்பு ராஜா (பாடகர் பொற் செழியன்), பாச்சூர் வே. அசோகன் (திருச்சி மாவட்ட கலை குழு தலைவர்), எம்.மணிவாச கம், கூத்தூர் பாபு, மற்றும் இளைஞர் அணி தோழர் கள், விஸ்வேஸ், அரவிந்த், ஜோயல் ஆகியோர் கலந்து கொண்டனர். கீழவாளாடி கிராமத்தை சேர்ந்த சட் டம் எரிப்பு வீரர்கள் கோவிந்தன், அங்கமுத்து, மைக்கேல் ஆகிய தோழர் களும், ஆதரவாளர்களும், பொதுமக்களும், உறவி னர்களும் இரங்கல் கூட் டத்தில் பங்கேற்று வீர வணக்கம் செலுத்தினர்.