புதுச்சேரி, ஜன. 10- புதுச்சேரி திராவிடர் கழகத்தின் மேனாள் பொறுப்பாள ரும், சிறந்த செயல் வீர ரும், கப்பல் மாலுமியாக இருந்து ஓய்வுபெற்றவரு மான துரை சிவாஜி உடல் நலக்குறைவு காரணமாக 07.01.2024 அன்று அதி காலை இயற்கை எய்தினார்.
அன்னாரின் மறை விற்கு கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை செலுத் தப்பட்டது. கழகத் தோழர்கள் அனைவரும் முதலியார் பேட்டை காவல் நிலையம் அருகில் ஒன்று கூடி அங்கிருந்து ஊர்வலமாக பாரதிதா சன் நகரில் அமைந்துள்ள துரை சிவாஜி இல்லம் சென்று அவரது உட லுக்கு மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார்கள்.
புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழகத் தலை வர் வே.அன்பரசன் தலை மையில் மாவட்டச் செய லாளர் கி. அறிவழகன் மாவட்டக் காப்பாளர் கள் இரா.இராசு, இர. சடகோபன், துணைத் தலைவர் மு.குப்புசாமி, பொதுக்குழு உறுப்பினர் விலாசினி இராசு, பகுத் தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கு. இரஞ்சித் குமார், தலைவர் நெ. நடராசன், செயலாளர் பா. குமார், திராவிடர் கழக இளைஞரணித் தலைவர் தி. இராசா, விடு தலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு. தமிழ்ச் செல்வன், செயலாளர் ஆ.சிவராசன், தொழி லாளரணிச் செயலாளர் கே. குமார், திராவிடர் கழக நகராட்சி பொறுப் பாளர்கள் செ. இளங் கோவன், சு.துளசிராமன், களஞ்சியம் வெங்கடே சன், பெ. ஆதிநாராயணன், கா.நா. முத்துவேல், முக மது நிஜாம் உள்ளிட் டோர் கலந்து கொண்ட னர். மறைந்த துரை சிவாஜி உடலுக்கு கடலூர் தி.மு.க மேனாள் சட்டமன்ற உறுப்பினர் இள.புக ழேந்தி, பெரியாரியல் அறிஞர் நெல்லிக்குப்பம் மு.அழகரசன் மற்றும் பல்வேறு சமூக நல கூட் டியக்கத் தலைவர்கள் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.