தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவர் தோழர் அனகாபுத்தூர் கு.ஆறுமுகம் உடல் நலம் குன்றி சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 8.1.2024 அன்று மாலை 5.30 மணியளவில் தோழர் கு.ஆறுமுகத்தை கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் நலம் விசாரித்தார். தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன் மற்றும் தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர். தோழர் அவர்கள் தற்போது நல்ல நிலையில் தேறி வருகிறார். வி.கனிமொழி, அ.தமிழ்ச் செல்வன் மற்றும் உறவினர் பரிமளா ஆகியோர் உட னிருந்து கவனித்து வருகிறார்கள்.
மருத்துவமனை சிகிச்சையில் கழகப் பொறுப்பாளர், கழகப் பொதுச் செயலாளர் நலன் விசாரிப்பு
Leave a Comment