தேனி,ஜன.10- தேனி மாவட் டம் கூடலூரைச் சேர்ந்த மதுரை வீரன் மனைவி அமரா வதி (வயது 45). கூலித் தொழி லாளியான இவர் கடந்த சில மாதங்களாக சரியாக சாப்பிட முடியாமல் உடல் எடை குறைந்து சோர்வுடன் காணப்பட்டார்.
இதனையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத் துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அமராவதிக்கு உணவுக்குழாயில் புற்று நோய் பாதித்திருப்பதை உறுதி செய் தனர்.
இதனைத் தொடர்ந்து அவ ருக்கு கடந்த மாதம் 8ஆம் தேதி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப் பட்டது.
மருத்துவர்கள் முத்துலெட் சுமி நாராயணன், குடல் இரைப்பை சிறப்பு மருத்துவர் அசோக்குமார் ஆகியோர் கொண்ட மருத்துவக்குழுவினர் அமராவதிக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
இதனையடுத்து அவர் பூரண குணமடைந்து மருத்துவமனை யில் இருந்து வீடு திரும்பினார். தனியார் மருத்துவமனையில் மட்டுமே செய்யப்படும் இது போன்ற அறுவை சிகிச்சையை அரசு மருத்துவக்கல்லூரி மருத் துவமனையில் செய்து அமரா வதி குணமடைந்ததால் அவரது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி யடைந்தனர்.
இது குறித்து கல்லூரி டீன் பாலசங்கர் கூறுகையில், உண வுக்குழாய் புற்று நோய் ஏற் பட்டால் மார்பை கிழித்து அறுவை சிகிச்சை செய்வதுதான் வழக்கம். ஆனால் அமராவதிக்கு கழுத்து, வயிறு பகுதியில் துளை யிட்டு புற்று நோய் பாதித்த உணவுக் குழாய் பகுதியை அகற்றி செயற்கை உணவுக் குழாய் பொருத்தப்பட்டது.
அவர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு 20 நாட்களுக்கு பிறகு குணம டைந்தார். சவால் நிறைந்த இந்த அறுவை சிகிச்சை தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் முதல் முறையாக மேற்கொள்ளப் பட்டது என்றார்.