சென்னை,ஜன.10- பத்திரப் பதிவுத் துறையில் ஆவணப்பதிவிற்கு லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்க அலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரப்பதிவு துறை கணினி மயம்
இது குறித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பதிவுத்துறையில் தினசரி நடக்கும் பதிவுகளில் ஒவ்வொரு ஆவணத்திற்கும் ஒரு குறிப்பிட்ட தொகை லஞ்சமாக பெறப்படுகிறது. அது துறையின் அமைச் சரின் பெயரில் வருவிக்கப்படுகிறது என்று செய்தி பரப்பப்பட்டு வருகிறது. பதிவுத்துறையைப் பொறுத்தமட்டில் ஒரு நானைக்கு ஏறக்குறைய 10 ஆயிரம் ஆவணங்கள் பதியப்படுகின்றன.
இதற்கான கட்டணங்களை இணை யம் மூலம் மட்டுமே செலுத்த முடியும் என்பதற்காக முற்றிலும் கணினி மய மாக்கப்பட்டு உள்ளன. அரசுக்கு குறைந்த தொகைகளை ஏ.டி.எம் கார்டு மூலம் செலுத்த எந்திரங்களும் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.
எனவே, பதிவுக்கு வருபவர்கள் பணத் தைக் கொண்டு வர தேவையில்லை. ஆவ ணங்கள் பதிவு செய்கையில் இடைத் தரகர்களின் தலையீடுஇருக்கக்கூடாது. இவர்களால் பொதுமக்கள் ஏமாற்றப் படக் கூடாது என்பதற்காக, சார்பதி வாளர் அலுவலகங்களுக்குள் இடைத் தரகர்களையோ, ஆவண எழுத்தர் களையோ அனுமதிக்க கூடாது என்று கண்டிப்பாக உத்தரவிடப்பட்டுள்ளது.
லஞ்சம் பெற்றால் நடவடிக்கை
ஆவண எழுத்தர்கள் வசூலிக்கும் கட்டணங்களுக்காக தனியே பில் வழங்க வேண்டும். அந்த பில்லையும் ஓர் ஆவண மாக இணைக்க வேண்டும் என்று உத்தர விடப்பட்டுள்ளது.
தவறும் ஆவண எழுத்தர்களின் உரி மங்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது தமிழ்நாட்டில் இருக்கும் 581 சார்பதி வாளர் அலுவலகங்களிலும் கண் காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு மண்டல துணை பதிவுத்துறை தலைவர் அலுவலகங்களிலிருந்தும் சென்னை யில் இருக்கும் பதிவுத் துறை தலைவர் அலுவலகத்திலிருந்தும் நேரடியாகக் கண்காணிக்கப்படுகிறது.
லஞ்சம் பெற்றால் உரிய நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
பதிவுத்துறைக்கு அதிகாரம்
பதிவுத்துறையில் 1865ஆம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் கணினிப்படுத்துதல் இணையம் மூலமாகவே கட்டணம் இன்றி வில்லங்க சான்று பார்த்தல், கட் டணம் இன்றி பதிவிறக்கம் செய்தல், அனைத்து கட்டணங்களையும் இணை யம் வழியாகவே செலுத்துதல், ஒரு சில ஆவணங்களை சார்பதிவாளர் அலுவ லகங்களுக்கு நேரடியாக வராமல் இணையம் மூலமாகவே பதிவு செய்தல், எல்லாவற்றிற்கும் மேலாக மோசடியாக ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டி ருப்பது கண்டறியப்பட்டால் அந்த ஆவணங்களை ரத்து செய்யும் அதிகாரம் பதிவுத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
புகார் தெரிவிக்க எண்கள் அறிவிப்பு
பதிவுக்கு கூடுதலான தொகையை யாருக்கும் கொடுக்க தேவையில்லை. இதையும் மீறி இடைத்தரகர்களோ ஆவண எழுத்தர்களோ அல்லது சார் பதிவாளர்களோ கேட்டால் அது குறித்த புகாரை நேரடியாகவே பதிவுத் துறைத் தலைவருக்கோ அல்லது மண் டல துணை பதிவுத்துறை தலைவர் களுக்கோ அல்லது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கோ அனுப்பலாம்.
பொதுமக்கள் 94984-52110, 94984-52120, 94984-52130 என்ற அலைபேசி எண்களில் புகார் தெரிவிக்கலாம். அமைச்சரின் பெயரிலோ அல்லது அதிகாரிகளின் பெயரிலோ ஆவணப் பதிவிற்கு லஞ்சம் கேட்டால் இது தொடர்பான புகார்களை நீtsமீநீ@tஸீ.ரீஷீஸ்.வீஸீ என்ற இணையதள முகவரியில் புகார் அளிக்கலாம். தகுந்த மேல் நடவடிக்கைக்காக வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் அரசு செயலாளருக்கு நேரடியாக அனுப்பலாம். -இவ்வாறு அவர் கூறி உள்ளார்.