சென்னை, ஜன. 10- கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், 14416 என்ற எண்ணில் ‘நட்புடன் உங்களோடு தொலைபேசி வழி மன நல சேவை’ திட்டத்தின் இரண் டாவது பிரிவை, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு ஆகியோர் நேற்று (9.1.2024) துவக்கி வைத்தனர். பின், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி.
இந்த மனநல சேவை மய்யம் 24 மணி நேரமும் செயல்படும். இவற்றில், மனநல மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள், ஆற் றுப்படுத்துனர்கள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கடந்த 2022இல் துவக்கப்பட்டு, மக்களி டம் வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுவரை 40,000த்துக்கும் மேற்பட்டோர் மனநல ஆலோ சனை பெற்று உள்ளனர். இதில், 70 சதவீத அழைப்புகள் 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களிடம் இருந்து வந்துள்ளது.
குறிப்பாக, மன உளைச்சல், அதீத மனக் கவலை, உறவு சார்ந்த சிக்கல்கள் மற்றும் இதர உளவியல் பிரச் சினைகள் சார்ந்த அழைப்புகள் அதிகம் வந்துள்ளன.
இதற்காக, ஒன்றிய அரசின் விருதையும் பெற்றுள்ளோம்.
இதன் இரண்டாவது பிரிவு துவங்கப்பட்டுள்ளது. கீழ்ப் பாக்கம் அரசு மனநலக் காப் பகத்தில், 25 மனநல மருத்து வர்கள், ஆண்டுக்கு 18 என, 54 முதுநிலை மருத்துவ மாணவர் கள், மூன்று உளவியலாளர்கள் மற்றும் 10 முதுகலை உளவியல் மாணவர்கள் கொண்டு செயல் பட்டு வருகிறது.
இந்த மனநல காப்பகம், தமிழ்நாடு மனநல மற்றும் நரம் பியல் அறிவியல் நிறுவனமாக, மாநில அளவில் தரம் உயர்த்தப் பட உள்ளது.
இதேபோல், 104 மருத்துவ சேவை மய்யத்தில், ‘நீட்’ தேர்வு எழுதும் மாணவர்கள், பொறியியல் மற்றும் கலைக்கல்லூரி மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு, தற்கொலை மேற்கொள்ளும் எண்ணம் தடுக்கப்பட்டு வரு கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.