சென்னை,ஜன.10- தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித் துள்ளார். அவர் தொழில்துறை அமைச்சரைப் பற்றிக் குறிப்பிடுகையில்:
“உலக முதலீட்டாளர் மாநாட்டை உலகமே வியக்கும் வகையில் நடத்தி – இந்தியாவே வியக்கும் வகையில் முதலீட்டை ஈர்த்து – என் இதயத்தில் நீங்காத இடத்தைப் பெற்றுவிட்டார் தம்பி டி.ஆர்.பி ராஜா. தொழில்துறை அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட குறுகிய காலத்திலேயே இமாலயச் சாதனை யைச் செய்திருக்கும் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவைப் பாராட்டுகிறேன். இவ்விழாவில் கண்ணும் கருத்துமாய் இருந்த தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்களுக்கும் எனது பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.