சென்னை, அக் 18 நீண்ட கால சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக 49 கோப்புகள் அளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது, குறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலை மைச் செயலகத்தில் செய் தியாளர்கள் சந்திப்பில் கூறி யதாவது:- புதிதாக ஆளுநருக்கு சட்டமன் றத்தில் நிறைவேற்றபட்ட சட் டங்கள் அனைத்தும் ஆளுநருக்கு அனுப்பப் பட்டுள்ளது. நீண்ட கால சிறைவாசிகளுக்கு விடுதலை தொடர்பாக 49 கோப்புகள் ஆளுநருக்கு அனுப்பபட்டுள்ளது. அறிஞர் அண்ணாவின் 115ஆவது ஆண்டு விழாவை முண்னிட்டும், சிறைவாசிகள் விடுதலை குறித்து கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கோப்புகள் ஆளுநரிடம் நிலுவையில் உள் ளது. நீண்ட கால சிறை வாசிகள் விடுதலை தொடர்பான கோப்பு களில் ஆளுநர் கையெ ழுத்திடமாட்டர் என பாஜக தலைவர் அண்ணா மலை கூறியது குறித்த செய்தியாளர்கள் கேள் விக்கு: ஆளுநரும், அண்ணாமலையும் ஒன்று என்பதை பாஜக தலைவர் அண்ணாமலை ஒப்புகொண்டதாக அமைச்சர் கூறினார். ஆன்லைன் ரம்மிக்கு தடைவிதிக்கபட்டுள்ள நிலையில், கண்காணிப்பு குழு அமைத்து அரசு கண்காணித்து வருகிறது. ஆன்லைன் விளையாட்டு களை பொறுத்த வரையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகிறது. என அமைச்சர் தெரிவித்தார்.
நீண்ட நாள் சிறைவாசிகள் 49 பேர் விடுதலை செய்வதற்கான கோப்புகள் ஆளுநரால் தடை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books