சிவகங்கை, அக். 18- சிவகங்கை மாவட்டம் தி. புதுப்பட்டி அரசு உயர் நிலைப் பள்ளியில் சிவ கங்கை மாவட்ட பகுத்தறி வாளர் கழகம் சார்பாக அறிவியல் மனப்பான்மை விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
.அறிவியல் ஆசிரியர் ராமச்சந்திரன் வரவேற்று பேசினார்.நிகழ்ச்சியில் முருகப்பா நடமாடும் ஆய் வக பயிற்சியாளர் அரங் குலவன் கலந்து கொண்டு சந்திர மறைப்பு சூரியமறைப்பு பரிணாம வளர்ச்சி உள் ளிட்டவற்றை செயல் முறை விளக்கங்கள் மூலம் செய்து காட்டி விளக்கிப் பேசி அறிவியல் உண்மை களை காட்சிப்பூர்வமாக விளக்கினார்.
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த சிவகங்கை மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் கவிஞர் கணேசன் பேசு வையில் லட்சக்கணக்கான அறிவியல் ஆசிரியர்கள் இந்த சமூகத்துக்கு கொண்டு சேர்க்க வேண்டிய கருத்தை ஒற்றை மனிதராக கொண்டு போய் சேர்த்த தந்தை பெரியார் அறிவி யல் ஆசிரியர்களுக்கு எல் லாம் ஆசிரியர் – .சந்திர மறைப்பு சூரிய மறைப்பு பற்றிய அறிவியல் உண் மையை சொல்லிக் கொடுத்து விட்டு கடற்கரையிலும் ஆற்றங்கரையிலும் அமர்ந்து மூதாதையர் ஆவிக்கு தர்ப்பணம் கொடுப் பது போன்ற மூட செயல் கள் யோசிக்க வேண்டி யவை .படிக்கிற அறிவியல் உண்மைகளை -போதிக்கிற அறிவியல் சிந்தனைகளை நடைமுறை வாழ்வில் கடைப்பிடித்தால் தான் அறிவியல் படிப்பதன் நோக்கம் நிறைவேறும் என்று குறிப்பிட்டார்
.இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் மதி வாணன், ஆசிரியர்கள், பயிற்சி ஆசிரியர்கள், மாண வர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஓவிய ஆசிரியர் நிஜாம் நன்றி கூறினார்.